Tuesday, May 14, 2024

Online shops

 உலகளாவிய ரீதியில் online மூலமான வியாபாரங்கள் அதிகரித்து நேரடியான கடைகள் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்லும்.  இதனால் கடைகள் 24 மணித்தியாலமும் இயங்கும் கடை வரிகள் குறையும் ஊளியர் தொகை குறையும் மின்சார செலவு மின்சார திருத்த செலவு என்பன குறையும்  எனவே பொருட்கள் விலை குறைவடையும்


 


வாடிக்கையாளர்கள் தமக்கு அருகாமையில் உள்ள கடைகள் தவிர்ந்து மிக தூரத்தில் அல்லதே அயல் நாடுகளில் இருந்து கொள்வனவு செய்யலாம். நிறைய தெரிவுகளுமீ கிடைக்கும்

சிறிதளவு போருட்களை கொண்டு வியாபாரத்தை தொடங்கலாம்.  தமது சிறிய உற்பத்திப் பொருட்களை இலகுவாக விற்பனை செய்யலாம்.இடைதரகர்களின் குறுக்கீடுகள் விலை நிர்னயங்கள் இருக்காது

மீளளித்தல் வசதிகள் வாங்கிய வாடிக்கையாளர்களின் அனுபவ பகிர்வுகள் பொருள் சம்மந்தமான மதிப்பீடுகள் என்பனவற்றை அறிந்து கொள்ளலாம்


மனிதர்களுடன் கடைகளில் பழகும் வாய்ப்புக்களே இழக்கப்படுகிறது

Saturday, May 11, 2024

இந்தியாவின் அடுத்த பிரதமர்

 இரானணுவம் பொருளாதாரம் விண்வெளி மருத்துவம் உளவியல் போன்ற துறைகளில் அமெரிக்கா சைனா பிரான்ஸ் யேர்மன் இங்கில்ந்து ரைசியா போன்ற நாடுகளுடன் தோடர்ந்து போட்டி போட அடுத்த பிரதமர் அவசியமானவர். 



மதவாதம் பிரதேசவாதம் இனவாதம்  கடந்து இவையே முக்கியமானது நாடு சார்பான பிரச்சனை வரும்போதே இப் பாகுபாடுகள் இல்லாது போய்விடும்.  தொடர்ந்து வரும் சர்வதோச அரசியலை சரியாக கையாளவும் மேலைத்தேச நாடுகளின் பிடிகளில் சிக்காமல் இருககவும் மீண்டும் மோடியே சிறந்தது

Wednesday, May 8, 2024

வொளிநாட்டு பெற்றோல் செட்

 கனடா அமெரிக்கா லன்டன் பிரான்ஸ் யேர்மன் போன்ற நாடுகளின் பெற்றோல் செட் குறைவடைந்து இல்லாமல் போகலாம். 

ரைசியா ஈரான் மத்திய கிழக்கு பிரச்சனை காரணமாக எரிவாயு மற்றும் எரிபொருளை  இறக்கமதி மற்றும் விலையேற்றம் காரணமாக பொருளாதார பிரச்சனை காரணமாக உலகநாடுகள் பதிலீட்டு யோசனையாக மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துகின்றன. இவை வீடுகளில் சார்ச் செய்யக்கூடியன. 

மேலும் வேலை ஆட்களை குறைப்பதற்காகவும் ஏரிபொருள் நிரப்பி பின் பணம் தராமல் செல்பவர்களை கட்டுப்படுத்தவும் தானியங்கி எரிபொருள் நிகரப்பு நிலையங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது . இது காட் மூவம் பணம் செலுத்திய பின்பே நிரப்பு மெசின் on ஆகும் வாகன உரிமையாளரே எரிபொருளை நிரப்பவேண்டும்

இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலைய வேலைவாய்ப்பும் குறைகிறது 



Tuesday, May 7, 2024

முடியாத பாவம்

இறந்த மற்றும் எதிர்கலங்களைப்பற்றி அறியக்கூடிய ஒருவன் கடற் கரையள னுடாக நடந்தூ சென்றுகொண்டிருந்தான் அப்போது கடற்கரையில் ஒரு மண்டைஒடு ஒன்று காணப்பட்டது. அவன் அம் மண்டை ஓட்டை எடுத்து பார்த்தபோது மிக பாவம் செய்த பாவியினூடையது அவன் செய்த பாவத்துக்காக அலனது உடல் கடலினால் அடித்து செல்லபாபட்டு மீன்களுக்கு உணவாகியது. ஆனில் அது இன்னும் செய்த பாவத்துக்குரிய கஸ்டங்கள் எல்லாத்தையும் அனுபவிக்கவில்லை எனவே அவன் மண்டையோட்டை வீட்டே கொண்டு சென்று வைத்தான். ஒவ்வொரு நாளும் இரவு அதை எடுத்து பார்த்துக்கொண்டு வந்தான் .இதை அவனது மனைவியும் அவாதானித்தாள் . அவளிற்கு பாரிய சந்தேகம் வந்தது இது பற்றி அயல் வீட்டு அம்மாவிடம் சொன்னாள் .அதற்கு அந்த அம்மா உன் கணவரின் பழய காதலியின் மண்டை ஓடாக அது இருக்கலாம் என்றாள்.உடனே அவனது மனைவி அந்த மண்டைஓட்டை எடுத்து உலக்கையால் குத்தி உடைத்தாள் . அப்போது அங்கே வந்த கணவனிற்கு அதன் விதி பற்றி தெளிவாக விளங்கியது

Friday, April 26, 2024

நீண்ட ஆயுள்

 ஒரு 75 வயது உள்ள முதியவர் தனது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடி கொண்டிருந்தார்.  தனது உறவினர் நண்பர்கள் அயலவர் எல்லோரையும் அழைத்து விருந்து வைத்தார். அவர் அவ் விருந்தில் உரையாடும்போது தனது ஆரோக்கிய வாழ்வுக்கு மது மற்றும் புகைத்தல் இல்லாமல் வாழ்ந்ததே காரணம் என கூறிக்கொண்டிருந்தார் அப்போது வீட்டு மாடியில் தளபாடங்கள் விழும் சத்தம் கேட்டது அப்போது வந்தவர்கள் என்ன சத்தம் என கேட்டார்கள் அதற்கு அவர் தனது அப்பா போதை அதிகமானால் இவ்வாறு செய்வார் என கூறினார் ( அப்பாவுக்கு வயது 96)

Tuesday, May 26, 2020

தொழிலின் தன்மை

டெல்லியில் ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார்.
அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம்....

ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே....
"நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க....
தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க...
இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரிருக்கலாம் இல்ல" என்றார்....

பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்...
"இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்"
"எப்படி?"

"பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க...

அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா...
உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்...
நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க...
மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க....
இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு...
இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு...

நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்....
நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும்...
அவர்கள் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்...
நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்...

ஆனால் உங்களுக்கு அப்படியில்லை...
உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது...
உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்....
உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும்...

நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்....
உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க....

ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்....
மேனேஜர் சமொசாவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்...

நீதி:
"தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது"


Sunday, May 24, 2020

உடலால் உழைப்போம் இல்லாதவருக்கு கொடுப்போம்

ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் . 

அடிக்கடி கோவிலுக்கு போவார்.

கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார் 
.
விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார் .

ஓரளவுக்கு வருமானம் வந்தது . 

அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் .

ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார் .

அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை .
எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. !

அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு..
அதை இவர் பார்த்தார் ..

அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம் 

"இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்

இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது.. 

அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டார் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சார் 

அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ... 

அதை சாப்பிட்டது ...

சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது...

புலி போனப்பின் கால் இல்லாத அந்த நரி மெதுவா நகர்ந்து கிட்ட வந்தது ... 

மிச்சமிருந்ததை சாப்பிட்டது .. 

திருப்தியா போய்ட்டது !

இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு நம்ம ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கார்

இப்ப அவர் யோசிக்க ஆரம்பிச்சார்

" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான் . அப்படி இருக்கறப்போ...

தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்.. 

நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழைலயும் கஷ்டபடனும் ..? 

எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...?

இப்படி யோசிச்சார் .

அதுக்கப்பறம் அவர் காட்டுக்கே போறதில்லை .

கோடலியை தூக்கி எறிஞ்சிட்டாரு........ 

பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டார் .

அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவார்
" கடவுள் நம்மை காப்பாத்துவார் ...அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படின்னு நம்பினார்.., 

கண்ணை முடிகிட்டு . கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டார் .

ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ...

சாப்பாடு வந்த பாடில்லே.. !

இவர் பசியால வாடி போனார் . உடம்பு துரும்பா 
இளைச்சு போய்டுச்சு . எலும்பும் தோலுமா ஆயிட்டார் .
ஒரு நாள் ராத்திரி நேரம் . கோயில்ல யாருமே இல்லை. இவர் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தார் ...
" ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....?" நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே..! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?"..- ன்னாரு

இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.....
..
" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே.. ! புலி கிட்ட இருந்து ..! 
அப்படின்னாராம்..... . புலி போல் உழைத்து சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுன்னாராம்....

இயன்றதை கொடுப்போம் இல்லாதவற்க்கு.

Online shops

 உலகளாவிய ரீதியில் online மூலமான வியாபாரங்கள் அதிகரித்து நேரடியான கடைகள் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்லும்.  இதனால் கடைகள் 24 மணித்தியாலமும...