Wednesday, August 8, 2012
உயிர்க்கடிகாரம்
மனித உடலுக்குள் ஓர் உயிர்க்கடிகாரம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இதுதான் நீங்கள் எப்போது சாப்பிட வேண்டும், எப்போது தூங்கவேண்டும் என்பதை நிர்ணயிக்கிறது. இது ஆயிரக்கணக்கான ஜீன்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. உயிர்க்கடிகாரம் நம்மூளைக்குள் உள்ள பார்வை முடிச்சின் மேல் உள்ளது. இவை ஒளியால் மட்டுமல்ல மற்ற உறுப்புகள் மற்றும் உணவாலும் கூட கட்டுப்படுத்தப்படுகிறது. என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கிவிறிரி என்ற மூலக்கூறுதான், செல்களின் ஆற்றல் தேவையறிந்து உணவு வேண்டும் எனத் தூண்டுகிறதாம். செல்லில் போதுமான உணவிருந்தால், கிவிறிரி ‘ஆன்’செய்யப்பட்டுவிடும் உணவின் உயிர்க்கடிகாரத்துக்கும் வளர்சிதை மாற்றத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவேதான் ஷிப்டில் பணிபுரிபவர்களின் உயிர்க்கடிகாரம் சமனநிலை இழக்கிறது. பருமனகின்றனர், மிகை அழுத்தம் மாரடைப்பு நிகழ்கிறது என கண்டறியப்படுகிறது.
Friday, August 3, 2012
பிரம்மச்சார்யமா? தாம்பத்தியமா? - எது பாதை
உடலுறவு கொள்வது அவரவர்களுடைய உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவைப் பொறுத்து ஆளுக்கு ஆள் மாறு படும். சிலருக்குத் தினமும் உடலுறவு இல்லாமல் முடியாது. சிலருக்கு வாரத்திற்கு இரண்டு முறை, மற்றும் சிலருக்கு மாதம் இருமுறை இருந்தால் கூடப் போதும். அவரவர்களுடைய உடற்கூற்றைப் பொறுத்து உடலுறவின் தேவை ஏற்படும். உடலுறவு கொள்ளாத பிரம்மசாரிகளைவிடக் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டவர்களே அதிக ஆயுள் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். மனிதனுக்கு உணவுக்கு அடுத்தபடியாக உடலுறவு இரண் டாவது இடத்தை வகிக்கிறது. மனிதன் உணவு இல்லாமல் உயிர் வாழ முடியாது. அதைப் போல, உடலுறவு இல்லாமல் மனிதன் தொடர்ந்து வாழ முடியாது. அத்துடன் உடலும் உள்ளமும் வளமாய் இருந்தால் உயிர் உடலில் நீண்ட நாள் இருக்கும். உடலையும், மனத்தையும், வளமாய் வைத்திருக்க உடலுறவு உதவுகிறது என்பதை மருத்துவ விஞ்ஞானம் நிரூபிக்கிறது.
எந்த மதமும் எந்தத் தத்துவமும் குடும்ப வாழ்க்கையை உடலுறவைத் தவறு என்று சொல்லவில்லை. சாதிக்குள்ளேயே திருமணம் செய்யாவிட்டால் தவறு ; பாலுறவு பற்றி எழுதுவது, பேசுவது, ஆராய்வது தவறு என்னும் பத்தாம்பசலிக் கொள்கை வேரூன்றியுள்ளது. இளைஞர்கள் தாங்களே பொருத்தமான இணையைத் தேடி நிர்ணயிக்க இயலவில்லை. மாறாக, வாழ்க்கைத் துணையைச் சாதியும் மதமும், உற்றாரும் உறவினரும், சொத்தும் வரதட்சணையுந்தாம் நிர்ணயிக்கின்றன.
பொருத்தமான வாழ்க்கைத் துணை யைத் தாங்களே தேடி நிர்ணயித்துக் கொள்ள முடியாத பரிதாபகரமான சூழ்நிலை உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்ககு முன்பாக எழுதப்பட்ட தமிழ், சமஸ்கிருத நூல்களில் பாலுறவுபற்றிக் குறிப்பிட்டிருப்பது போல இன்று யாரும் எழுதத் துணியாததற்குக் காரணம் பாலியல் எழுத்தாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு விடுவோமோ என்று பயந்தான் காரணம். மக்கள் இன்னும் மனம் முதிர்ச்சி அடையவில்லை.
காதலும், காமமும், உடலுறவும் வாழ்க் கையில் இன்றியமையாதவை. அவற்றைச் சொல்லவேண்டிய முறையில் சொன்னால் தான் மகாபாரதம், இராமாயணம், சாகுந்தலம், சங்கப் பாடல்கள், திருக்குறள் உட்பட எல்லா இலக்கியங்களையும் சுவைத்து அனுபவிக்க முடியும். மணமாகாத வாலிபர்களின் இச்சை யைத் தூண்டப் பச்சைபச்சையாக உடலுறவு களை வர்ணித்துச் சதை வியாபாரம் செய்யும் மலிவுப்பதிப்புகள், சாலையோரப் புத்தகக் கடைகளில் மறைத்து விற்கப்படுகின்றன. அவைகள் எல்லாம் ஆபாசமானவை. திருக்குறளில காமத்துப்பால் என்று பிரித்துத் தனியாகப் பாலுறவைப்பற்றி எழுதி யுள்ளார். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட காமசூத்திரத்தைத் தமிழில் அதிவீரராம பாண்டியன் கொக்கோகம் என்று எழுதியுள்ளார். இந்நூல், பாலுறவுபற்றி விரி வாகக் கூறுகிறது. வடநாட்டில் கஜுரா, கோனார்க் கோவிலில் உடலுறவு நிலையை அற்புதச் சிற்பங்களாக வடித்துள்ளனர். தென்னிந்தியக் கோவில்களிலும் இத்தகைய உடலுறவு நிலைச் சிற்பங்களைக் காணலாம். மதம், இதிகாசம், இலக்கியம், சிற்பம், சித்திரம் அனைத்திலும் பாலுறவு பற்றி எழுதப்பட்டுள் ளது. அது தவறானது என்றால் அவ்வாறு எழுதுவார்களா? மனித இனம் ஆதியிலிருந்து இன்றுவரை பாலுறவின் பற்று கொண்டிருக் கிறது. காரணம், அதில் கிடைக்கும் இன்பத் திற்கு ஈடான வேறு இன்பம் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
எல்லாப் பிரச்சினைகளையும், நோய்களையும் ஒரே ஒரு மருந்தால் தீர்க்க முடியுமா முடியும் ; அது குடும்ப வாழ்க்கையில் உள்ள உடலுறவு ஒன்றால்தான், தலைவலி, முதுகுவலி, இடுப்புவலி, மனநோய் எல்லா வற்றையும் தீர்க்க முடியும். உடலுறவுதான் உடலிலுள்ள தடுப்புச் சக்தியான இம்யூன் (Imune) என்னும் சக்தியைத் துரிதப்படுத்துகிறது. இதனால் அனைத்து உடல் வலிகளும், தசை வலிகளும் நரம்பு வலிகளும், மனநோயும் தீருகின்றன.
ஒருவன் குடும்ப வாழ்க்கையில் உடலுறவு கொள்ளாதவனாய் இருந்தால் மனத்தில் இறுக்கமும் ஒரு வேகமான கோபமான நிலையும் ஏற்படும். இதற்குக் காரணம், உடலுறவு கொள்ளாததால் அட்ரினலின் (Adernalin) ஹார்மோன் சுரப்பது தான். உடலுறவு கொள்வதால் உயர் இரத்த அழுத்தம் இதய நோயைக் குறைத்து இரத்தத்தை விருத்தியடையச் செய்யும். பெண்களுக்கு மார்பில் கட்டி ஏற்படாது சளி பிடிக்காது;
அடிக்கடி உடலுறவு கொள்வதால் தேவையான அளவு இரத்த ஓட்டம் அதிகரித்துப் பெண்களின் உடலிலுள்ள அனைத்து வலிகளும் தீர்ந்து விடும். உடலுறவின் போது ஹார்மோன் சுரப்பது தூண்டப்பட்டுப் பல விதமான இரசாயனப் பொருள்கள் உற்பத்தியாகின்றன. அவை வலி நிவாரணியாக, மருந்தாகப் பெண்களுக்கு அமைந்து, நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்படும். சரியான அளவில் அடிக்கடி உடலுறவு கொள்பவர்களுக்குச் செரிமானம் அதிகமாகிப் பசி எடுக்கும் ; நல்ல தூக்கம் வரும் ; அதனால் மன இறுக்கம், கவலை தீரும் ; மனத்தில் அமைதி, நிதானம், மகிழ்ச்சி ஏற்படும்.
நன்றி : “யோகக்கலையும்
இயற்கை மருத்துவமும்” -நூல்.
ஞாபகசக்தி
சற்று முன் கேட்ட டெலிபோன் நம்பரை உடனே திருப்பிச் சொல்ல முடிகிறது. ஒரு மணிநேரம் கழித்து அதே நம்பர் மறந்துவிடுகிறது. ஆனால் நமது சொந்த டெலிபோன் எண், பிறந்த தேதி போன்ற நம்பர்கள் என்றும் மறப்பதில்லை. ஏன் இப்படி?
நமக்கு இரண்டுவித ஞாபகசக்தி இருக்கிறது. தற்காலிக நினைவு மற்றது நிரந்தர நினைவு. நினைவுகள் யாவும் மூளையில் நரம்பு செல்களில் சேமிக்கப்படுகின்றன. ஒரு டெலிபோன் நம்பரைக் கேட்டதும் அதற்கான ஒரு நரம்புக்கூட்டம் உடனே அதைப் பதிவு செய்வதில் முனைகிறது. இந்த நரம்புக்கூட்டத்தை "ட்ரேஸ்' என்று (Trace)கூப்பிடுகிறார்கள். நமக்கு தற்காலிக நினைவுக்கென்று ஒரு ட்ரேஸும் அதே சமயம் நிரந்தர நினைவுக்கென்று இன்னொரு ட்ரேஸும் ஒரே சமயத்தில் மூளையில் உருவாகிறது. மூளையில், தற்காலிக ட்ரேஸானது காம்மா கதுப்பிலும் நிரந்தர ட்ரேஸ்கள் ஆல்ஃபா பீட்டா என்ற கதுப்பிலும் காணப்படுகின்றன. இதே அமைப்பு ஈக்களிலும் காணப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா?
ஒரு சம்பவத்தை அல்லது தகவலை முதல் முறையாக கேட்கும்போது அல்லது படிக்கும்போது அது இரண்டுவித டிரேஸிலும் பதிகிறது. தற்காலிக டிரேஸ் வேகமாக உருவானாலும் அது உடனே கலைந்து விடுகிறது. நிரந்தர டிரேஸ் மெல்ல ஆசுவாசமாக உருவாகிறது. அது முடிவடையவேண்டுமானால் மீண்டும் அதே சம்பவத்தை அல்லது படித்ததை நாம் அனுபவிக்க வேண்டும். நிரந்தர டிரேஸ் நரம்புக்கூட்டம், இரண்டாம் முறை, மூன்றாம் முறை தூண்டப்படும்போது அதன் டிரேஸ் முற்றுப்பெறுகிறது. முற்றுப் பெற்றதும் அது நிரந்தர நினைவாகிவிடுகிறது.
தற்காலிக டிரேஸ் எத்தனை முறை தூண்டப்பட்டாலும், அது உடனே கலைந்துவிடுகிறது. ஈக்குக்கூட தற்காலிக, நிரந்தர நினைவுகள் இருக்கிறது என்று கோல்டு ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வுக்கூடத்தின் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஈயை சின்னக் குழாயில் வைத்து அதில் கெட்ட நாற்றமுடைய காற்றை அனுப்பும்போது கூடவே லேசாக மின்சார ஷாக் கொடுப்பார்கள். அதற்கப்புறம் ஈக்கு ஷாக் கொடுக்கும்போதெல்லாம் துர்நாற்றக் காற்றை அந்த ஈ எதிர்பார்க்கும். அல்லது துர்நாற்றக் காற்று வரும்போதெல்லாம் ஷாக் அடிக்குமோ என்று அஞ்சும். ஈயின் காம்மா கதுப்பிலும் ஆல்ஃபாபீட்டா கதுப்பிலும் இந்த அனுபவம் பதிகிறது என்று தெரிந்துகொண்டனர். நுட்பமான கத்தி மூலம் இந்த கதுப்புகளை ஒவ்வொன்றாக வெட்டி நீக்கும்போது அதற்கேற்ப தற்காலிக அல்லது நிரந்தர நினைவுகள் மறைவதைக் கவனித்தனர். ஒரு படி மேலே சென்று, நிரந்தர நினைவினை சேமிக்க உதவும் என்ஸைமினையும் அதற்கான ஜீனையும் கண்டுபிடித்தனர். என்ன ஆச்சரியம்! மனிதர்களுக்கும்கூட அதே ஜீனும் அதே என்ஸைமும் இருக்கிறது. நினைவினை சேமிக்கும் தந்திரம் ஈயில் தோன்றி பின் மனிதன் வரை வளர்ந்திருக்கிறது என்று தோன்றுகிறது.
மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்கும் ஒரு சேதி; எதை நீங்கள் நிரந்தரமாக நினைவில் பதித்துக்கொள்ள விரும்புகிறீர்களோ அதை முதலில் தற்காலிகமாக நினைத்துப் பாருங்கள் மீண்டும் அதை மறுபடி மறுபடி மூன்று முறையாவது கொஞ்ச நேரம் இடைவெளிவிட்டு நினைவுகூட்டிப் பாருங்கள் அப்புறம் அது மறக்கிறதா என்று பாருங்கள். மறக்க மாட்டீர்கள் அதற்கு நான் கியாரண்டி.
Subscribe to:
Posts (Atom)
Online shops
உலகளாவிய ரீதியில் online மூலமான வியாபாரங்கள் அதிகரித்து நேரடியான கடைகள் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்லும். இதனால் கடைகள் 24 மணித்தியாலமும...
-
அந்த கிராமத்தில் எந்த பொருள் காணாமல் போனாலும் அல்லது ஏதாவது பிரச்சினை என்றால் ஊரே அந்த இரண்டு சகோதர சிறுவர்களை தான் விசாரிக்கும் ,அந்த அளவுக...
-
1. உணர்வு மனம் (அல்லது புற மனம்) 2. உணர்விற்கப்பாற்பட்ட மனம் (அல்லது ஆழ் மனம்) மனிதரின் மனதின் முக்காற் பங்கினை உள்ளடக்கியிருப்பது இந்த உண...
-
ஒரு ஆள் ஹைவே ஒன்றில் மிகவும் ஸ்லோவாக காரை ஒட்டிக் கொண்டு இருந்தான். அவனை அணுகிய ஒரு ட்ராபிக் இன்ஸ்பெக்டர், சார், கொஞ்சம் வேகமாக ஒட்டுங்கள்...