Tuesday, May 26, 2020

தொழிலின் தன்மை

டெல்லியில் ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார்.
அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம்....

ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே....
"நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க....
தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க...
இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரிருக்கலாம் இல்ல" என்றார்....

பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்...
"இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்"
"எப்படி?"

"பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க...

அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா...
உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்...
நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க...
மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க....
இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு...
இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு...

நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்....
நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும்...
அவர்கள் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்...
நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்...

ஆனால் உங்களுக்கு அப்படியில்லை...
உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது...
உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்....
உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும்...

நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்....
உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க....

ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்....
மேனேஜர் சமொசாவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்...

நீதி:
"தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது"


Sunday, May 24, 2020

உடலால் உழைப்போம் இல்லாதவருக்கு கொடுப்போம்

ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் . 

அடிக்கடி கோவிலுக்கு போவார்.

கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார் 
.
விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார் .

ஓரளவுக்கு வருமானம் வந்தது . 

அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் .

ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார் .

அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை .
எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. !

அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு..
அதை இவர் பார்த்தார் ..

அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம் 

"இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்

இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது.. 

அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டார் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சார் 

அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ... 

அதை சாப்பிட்டது ...

சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது...

புலி போனப்பின் கால் இல்லாத அந்த நரி மெதுவா நகர்ந்து கிட்ட வந்தது ... 

மிச்சமிருந்ததை சாப்பிட்டது .. 

திருப்தியா போய்ட்டது !

இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு நம்ம ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கார்

இப்ப அவர் யோசிக்க ஆரம்பிச்சார்

" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான் . அப்படி இருக்கறப்போ...

தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்.. 

நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழைலயும் கஷ்டபடனும் ..? 

எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...?

இப்படி யோசிச்சார் .

அதுக்கப்பறம் அவர் காட்டுக்கே போறதில்லை .

கோடலியை தூக்கி எறிஞ்சிட்டாரு........ 

பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டார் .

அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவார்
" கடவுள் நம்மை காப்பாத்துவார் ...அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படின்னு நம்பினார்.., 

கண்ணை முடிகிட்டு . கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டார் .

ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ...

சாப்பாடு வந்த பாடில்லே.. !

இவர் பசியால வாடி போனார் . உடம்பு துரும்பா 
இளைச்சு போய்டுச்சு . எலும்பும் தோலுமா ஆயிட்டார் .
ஒரு நாள் ராத்திரி நேரம் . கோயில்ல யாருமே இல்லை. இவர் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தார் ...
" ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....?" நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே..! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?"..- ன்னாரு

இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.....
..
" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே.. ! புலி கிட்ட இருந்து ..! 
அப்படின்னாராம்..... . புலி போல் உழைத்து சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுன்னாராம்....

இயன்றதை கொடுப்போம் இல்லாதவற்க்கு.

தவளை பரிசோதனையும் தவறான முடிவும்

ஒரு ஆராய்ச்சி மாணவன் தவளை ஒன்றை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.

*"தாவு"என்று சொன்னால் தாவும்படி பழக்கியிருந்தான்!*.
ஒரு காலை வெட்டி விட்டு "தாவு"என்றான்.தாவியது.
இரண்டாம் காலை வெட்டி விட்டு "தாவு" என்றான். வலியோடு தாவியது. மூன்றாம் காலை எடுத்தும் மிகுந்த வலியோடு ஒற்றைக் காலால் தாவியது.
நான்காம் காலையும் வெட்டி விட்டு "தாவு"என்றான்.
நகர முடியாமல் பரிதாபமாய் படுத்தது. மறுபடி தாவச் சொல்லி கத்திக் கொண்டேயிருந்தான்.

 அதனிடமிருந்து அசைவேயில்லை!
ஆராய்ச்சி முடிவை இப்படி எழுதினான்-
*"நான்கு கால்களையும் எடுத்து விட்டால் தவளைக்கு காது கேட்காது"*
*இப்படி தான் இன்றய கல்விமுறையும் பலரின் புரிதல்களும் உள்ளது.*

Monday, May 11, 2020

சிற்றின்பமும் பேரின்பமும்

உயிரனங்களின் வாழ்க்கை இன்பங்களை நோக்கி அவற்றை அனுபவிக்கும் நோக்கிலேயே நகர்த்தப்படுகின்றது.மனிதன் இதற்கு விதிவிலக்கு அல்ல.சாப்பிடுதல், தொலைக்காட்சி பார்த்தல்,  குளிர்பானம் அருந்துதல், தொலைபேசி உரையாடல், குளிரூட்டிய அறையில் இருத்தல்  என்பன சிற்றின்பத்தில் அமையும்.  உதரணமாக உணவு அருந்துவதை கருதுவோமாயின் முதல் பார்க்கும் போது கண்ணிற்கு இன்பம் பின் அதன் வாசம் வரும் போது மூக்கிற்கு இன்பம் பின் வாயினால் அரைத்து சாப்பிடும் போது ருசி நரும்புகாளால் ருசி உணரப்படும் போது  இன்பம், இவ்வாறு சிற்றின்பம் ஐம்புலன்களினாலேயே நுகரப்படும். 

Saturday, May 9, 2020

பொறுமை அவதானத்தின் வெற்றி

ஒரு வீட்டில் ஒரு முறட்டு எலி இருந்தது. அது வீட்டு உணவுப்பொருட்களை உண்டும் சேதம் செய்தும் வந்தது அது வீட்டு பூனையையும் தாக்கி பூனையையும் கயப்படுத்தியும் வந்தது வீட்டு பூனையால் அதனை பிடிக்க முடியவில்லை. வேறு இளன் பூனைகாளை கொண்டுவந்து விட்டபோதும் அப் பூனைகளாலும் அவ் எலியை பிடிக்க முடியவிலை . அவ் வீட்டு எஜமான் ஊரில் உளவர்களிடம் இப் பிரசனயை சொன்னபொது ஊரில் உள்ளவர்கள் ஒரு கிழட்டு பூனை ஒன்றினால் தான் இந்த எலியை பிடிக்க முடியும் என தெரிவித்தார்கள் எனவே அவ் வீட்டு எஜ்மான் அக் கிழட்டு பூனையை தன் வீட்டில் கொண்டு போய் விட்டான் . அப் பூனை முதல் நாள் உணவை உண்டபின் அலுப்போடு துங்கியது  எலி பூனை பார்த்து வேளியே வரவிலை இரண்டாம் நாளும் கிளட்டு பூனை  உணவை உண்டபின் அலுப்போடு துங்கியது எலி இதை அவதானித்தபின் மெல்ல தனது பழய ஆட்டத்தை தொடங்கியது எலியின் நடமாட்டத்தை சரி யாக அவதானித்த பூனை சரியான தருனத்தில் எலியை பிடித்து கொண்றது
எந்தொரு விடையத்தையும் நிதானமாக அவாதானித்து செயைதல் வெற்றி கிடைக்கும்

Sunday, May 3, 2020

cc and bcc in gmail தமிழ் விளக்கம்


cc என்பது ஒரு பலருக்கு mail அனுப்பப்படும்போது யார் யாருக்கு அனுப்பட்டது என எல்லோரும் அறியலாம் ஆனால் Bcc என்பது பலருக்கு mail அனுப்பப்படும் போது mail யை பெறுபவர் யார் யாருக்கு mail அனுப்பட்டது என அறியமுடியாது

Online shops

 உலகளாவிய ரீதியில் online மூலமான வியாபாரங்கள் அதிகரித்து நேரடியான கடைகள் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்லும்.  இதனால் கடைகள் 24 மணித்தியாலமும...