Sunday, June 24, 2012

joke

ஒரு ஆள் ஹைவே ஒன்றில் மிகவும் ஸ்லோவாக காரை ஒட்டிக் கொண்டு இருந்தான். அவனை அணுகிய ஒரு ட்ராபிக் இன்ஸ்பெக்டர், சார், கொஞ்சம் வேகமாக ஒட்டுங்கள் என்றார். அதற்கு அவன் 'அங்கே பாருங்க 21 என்று ஹைவேயில் எழுதி இருக்கிறது' என்றான் 'அது ஸ்பீட் லிமிட் இல்லை சார்,அதுதான் ஹைவே நம்பர், எனவே அதைப் பார்த்து வண்டி ஓட்ட வேண்டாம்' என்ற இன்ஸ்பெக்டர் , பின் சீட்டில் இருந்த அவன் மனைவியை எதேச்சையாக கவனித்து, 'அது சரி சார், இந்த அம்மா ஏன் இப்படி உடம்பெல்லாம் நடுங்கி வியர்த்து வழிந்து கொண்டு இருக்காங்க' என்று கேட்டார் 'ஒ அதுவா, கொஞ்சம் முன்னாடி தான் ஹைவே நம்பர். 210 இல் இருந்து பிரிந்து வந்தோம் ' என்றான் அவன்.

தர்கம் சில

கணிதப் பேராசிரியர் ஒருவர் ஏர்போர்டில் பிடிக்கப்பட்டார். பெட்டியின் உள்ளே பயங்கரமான பாம் வைத்திருந்தார். 'இதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் ப்ரொபெசர்?' என்றார் பாதுகாப்பு அதிகாரி. 'பயணிகளின் பாதுகாப்பு கருதி தான் இதை எடுத்து வந்தேன். ஒரே விமானத்தில் இரண்டு பேர் பாம் வைத்திருப்பதற்கான நிகழ்தகவு கிட்டத்தட்ட பூஜ்ஜியம்' என்றார் அவர். முன் அட்டையில்: பின் அட்டையில் இருக்கும் வாசகம் உண்மை. பின் அட்டையில்: முன் அட்டையில் இருக்கும் வாசகம் பொய் ஒருவன் பொய் சொல்லும் போதெல்லாம் அவன் மூக்கு நீள்கிறது. 'என் மூக்கு இப்போது நீள்கிறது' என்று அவன் சொல்கிறான். இப்போது என்ன ஆகும்? -ஒவ்வொன்றுக்கும் எதிர் உண்டு. இதன் படி 'ஒவ்வொன்றுக்கும் எதிர் உண்டு' என்ற வாக்கியத்திற்கும் எதிர் உண்டு. எனவே ஒவ்வொன்றுக்கும் எதிர் இல்லை.

Friday, June 22, 2012

இரட்டை விண்மீன்

இரட்டை விண்மீன் (binary star) என்பது தமது ஒரே பொது நிறை மையத்தைச் சுற்றி வரும் இரண்டு விண்மீன்களைக் கொண்ட ஒரு விண்மீன் தொகுதி ஆகும். வெளிச்சமான விண்மீன் முதன்மையானது எனவும் மற்றையது அதன் துணை விண்மீன், அல்லது துணை எனவும் அழைக்கப்படுகிறது. வானத்தில் சில விண்மீன்கள் இரட்டையாக தென்படும். ஆரம்பத்தில் மானிடர் இது காட்சிப் பிழை என நினைத்ததுன்டு. ஆனால் அவை உண்மையாகவே இரட்டை விண்மீன்கள் என்று பின்னர் தான் கண்டறியப்பட்டது. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Eclipsing_binary_star_animation_2.gif

சதுரங்கம்

தன் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை அதிகம் மாறாத ஒரே விளையாட்டு சதுரங்கம் என்கிறார்கள். என்னதான் இந்த விளையாட்டு மனிதனுள் இருக்கும் போர்க்குணத்தை, வன்முறையை அதிகரிக்கிறது (எப்படா அடுத்தவனை வெட்டலாம்) என்று ஒரு சாரார் குற்றம் சாட்டினாலும் செஸ் பொதுவாக மனிதனின் புத்திக் கூர்மையை, பிரச்சனைகளை சுலபமாகத் தீர்க்கும் Problem solving skill களை ,முடிவெடுக்கும் திறமையை, பின்னால் வரும் சிக்கல்களை முன்பே ஊகிக்கும் திறமையை வெகுவாக வளர்க்கிறது என்கிறார்கள்.முடிந்தால் பள்ளிகளில் செஸ் விளையாட்டை கட்டாயமாக்குவது நல்லது. விஸ்வநாதன் ஆனந்த் அளவு சாம்பியன் ஆக வேண்டும் என்ற குறிக்கோள் இல்லாவிட்டாலும் CHESS IS FUN !

Online shops

 உலகளாவிய ரீதியில் online மூலமான வியாபாரங்கள் அதிகரித்து நேரடியான கடைகள் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்லும்.  இதனால் கடைகள் 24 மணித்தியாலமும...