Friday, July 27, 2012

ஆழ் மனம்,புற மனம்

1. உணர்வு மனம் (அல்லது புற மனம்) 2. உணர்விற்கப்பாற்பட்ட மனம் (அல்லது ஆழ் மனம்) மனிதரின் மனதின் முக்காற் பங்கினை உள்ளடக்கியிருப்பது இந்த உணர்ச்சிக்கப்பாற்பட்ட ஆழ் மனமே. சகல விதமான அபிலாஷைகள், எதிர்பார்ப்புகளைப் புதைத்து வைத்துள்ளது. இந்த ஆழ்மனம்தான் மனிதரது சகல விதமான பிரச்னைகளிற்கும் காரணம். பகுத்தறிவு பேசுவது மனிதரின் உணர்வு மனம். ஆனால் அவரது உணர்விற்கப்பாற்பட்ட மனமான ஆழ்மனதினிலே அவர் பேசும் பகுத்தறிவிற்கேற்ற கொள்கைகள், எண்ணங்கள் பதிந்திராவிட்டால்..அவர் எவ்வளவு பகுத்தறிவு வாதம் புரிந்தும் பயனில்லை.

Thursday, July 26, 2012

பிரபஞ்சத்தின் உருவம்

பிரபஞ்சத்தின் உருவ அமைப்பானது மூன்று விதமாகக் காணப்படுவதற்குச் சாத்தியமுள்ளது. இவற்றை அவர் முறையே 'மூடிய பிரபஞ்சம்', 'திறந்த பிரபஞ்சம்', 'தட்டையான பிரபஞ்சம்' என மூன்றாகப் பிரித்தார். 'மூடிய பிரபஞ்சம்' என்றாலென்ன? அது எப்படியிருக்கும்? மூடிய பிரபஞ்சத்திற்கு உதாரணமாக ஒரு கோளத்தின் அமைப்பையே குறிக்கலாம். கோளமொன்றின் வடிவம் எவ்விதம் வளைந்து காணப்படுகிறதோ அவ்விதமே இப்பிரபஞ்சமும் வளைந்து மூடிய நிலையில் இருப்பதற்குச் சாத்தியங்களுள்ளன. உண்மையில் ஒருவர் இவ்வகையான மூடிய பிரபஞ்சத்தில் நேர் கோட்டில் பயணம் செய்வாரென்றால் மீண்டும் தனது தொடக்க இடத்துக்கே வந்து விடுவார். இவ்வகையான நிலையினை நமது பூமியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை மிகவும் இலகுவாக விளங்கி விடும். உதாரணமாகப் பூமியின் மேற்பரப்பில் ஓரிடத்திலிருந்து பயணத்தைத் தொடங்குமொருவர் நேராக நடந்து செல்வாரேயானல் மீண்டும் தனது தொடக்குப் புள்ளிக்கே வந்து விடுவாரல்லவா? அது போல் தான் 'மூடிய பிரபஞ்சத்தி'னுள் பயணிப்பவரின் நிலையும். பிரபஞ்சத்தின் உருவ அமைப்பு பற்றிய அடுத்தவகை 'திறந்த வகைப் பிரபஞ்சம்' ஆகும். குதிரையொன்றின் முதுகில் அமர்ந்து செல்லப் பாவிக்கபப்டும் 'சேணம்' போல் அதனது அமைப்பிருக்கும். இவ்வகையான 'திறந்த பிரபஞ்ச'த்திற்கு முடிவென்பதேயில்லை. இவ்வகையான பிரபஞ்சத்தில் ஓரிடத்தில் பயணத்தைத் தொடங்குபவர் நேராகச் செல்லும் பட்சத்தில் கூட மீண்டும் தனது தொடக்க இடத்துக்குத் திரும்புவதேயில்லை. போனவர் போனவரே. மூன்றாவது வகையான பிரபஞ்சத்தின் வடிவைத் 'தட்டை'யானதெனக் குறிப்பிட்டோமல்லவா? உண்மையில் இவ்வகையான பிரபஞ்ச வடிவ அமைப்பானது மூடிய வடிவ அமைப்புக்கும், திறந்த வடிவ அமைப்புக்கும் இடைப்பட்ட வகையிலான வடிவ அமைப்பினச் சேர்ந்தது. இவ்வகையான வடிவை முடிவற்று நீண்டிருக்கும் மேசை ஒன்றின் மேற்பரப்புக்கு ஒப்பிடலாம்.

மூடிய நேர வளையம்

பிரிட்டிஷ் பெளதிகவியல்/வானியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹார்கின்ஸ்ஸின் (Stephen Hawking) கருத்து என்னவென்றால்...நமது பிரபஞ்சத்தின் இருப்பானது மூடிய நேர வளையத்தை ஒத்தது. இவரது கருத்துப்படி பெருவெடிப்பில் உருவாகும் பிரபஞ்சமானது இறுதியில் ஒரு குறிப்பிட்ட நிலையில், அதாவது பிரபஞ்சத்தின் விரிவடையும் வேகமானது அதியுயர் நிலையினை அடைந்ததும் அதுவரையில் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த நேரமானது பின்னோக்கி செல்லத் தொடங்கும். எதுவரை இவ்விதமாக நேரமானது பின்னோக்கிச் செல்லுமென்றால் இன்னுமொரு பெருவெடிப்பு ஏற்படும் வரையில்தான். அதன் பின்னர் நேரமானது மீண்டும் முன்னோக்கி நகரத் தொடங்கும். இவ்விதமாக இப்பிரபஞ்சமானது மீண்டும் மீண்டும் வெடித்துக் கொண்டேயிருக்கும். உண்மையில் இத்தகைய பிரபஞ்சத்தில் வசிக்கும் ஒருவருக்கு நேரம் முன்னோக்கிச் செல்கிறதா அல்லது பின்னோக்கிச் செல்கிறதா என்பது கூடத் தெரியாது. ஏனெனில் அவரால் நேரம் முன்னோக்கிச் செல்வதாக மட்டும் தான் உணர முடியும். உண்மையில் தற்போது நேரம் முன்னோக்கிச் செல்கிறதா அல்லது பின்னோக்கிச் செல்கிறதா என்பது கூடச் சரியாகத் தெரியாது. இவ்விதமாக இருக்கிறது ஸ்டீபன் ஹார்கின்ஸ்ஸின் சிந்தனையின் போக்கு. இன்னும் சில கோட்பாடுகளோ ஆரம்பத்தில் ஒரு பெரு வெடிப்பல்ல பல பெருவெடிப்புகள் ஏற்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிவிக்கின்றன.

Tuesday, July 24, 2012

கடவுள் காணோமாம்

அந்த கிராமத்தில் எந்த பொருள் காணாமல் போனாலும் அல்லது ஏதாவது பிரச்சினை என்றால் ஊரே அந்த இரண்டு சகோதர சிறுவர்களை தான் விசாரிக்கும் ,அந்த அளவுக்கு அவர்கள் famous ..அவர்களின் குறும்பை பொறுக்க முடியாத அவர்களின் தாய் நேரே அவர்கள் இருவரையும் கிராமத்திற்கு புதுசாக வந்திருந்த பாதிரியாரிடம் கொண்டு போய் விட்டாள்...அவர் முதலில் பெரியவனை மட்டும் அழைத்து இருக்க சொல்லி விட்டு சிறியவனை வீட்டுக்கு போக சொன்னார், பாதிரியார் பெரியவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்... பாதிரியார்:my son,Where is God? அதற்கு அந்த சிறுவன் ஏதும் சொல்லாமல் நிற்க,சற்றே கோப பட்ட பாதிரியார் மீண்டும், உரத்த குரலில்... "Where is God"என்றார்.. இந்த முறை சிறுவனின் முகத்தில் லேசான கலவரம் எட்டி பார்த்தது...ஆனாலும் அமைதியாகவே இருக்க, இன்னும் கோப பட்ட பாதிரியார், "Where is God "என்று அந்த அறையே அதிரும் வண்ணம் கத்த, சடாரென வேகம் எடுத்த சிறுவன் நேரே ஓடினான் ஓடினான்,அவனின் தம்பியிடம் ஓடினான்,சென்று சொன்னான் , "டேய் இந்த தடவை நாம் உண்மையிலேயே பெரிய பிரச்சினையில் மாட்டி கொண்டோம் என்றான்" என்ன என்று மற்றொருவன் அமைதியாக கேற்க,அவன் சொன்னான்.... "இந்த தடவை கடவுள் காணோமாம் எல்லோரும் நாம் தான் எடுத்து இருப்போம் என்று சந்தேக படுகிறார்கள்"

Sunday, July 22, 2012

இருள் பற்றி இன்னும் விழங்௧வில்லை

சூரியனில் சுய ஓளி இருக்கும் வரை சூரியனுக்கு இருள் ௭ன்பதை உணர்த்தவோ விழக்கவோ இயலாது. இருள் ௭ன்பது ஒளியின் ௭திர் தன்மையோ அல்லது ஒளி இல்லாத நிலையாகவோ இருக்கலாம். ஒளி இருள் இல்லாத தன்மையாகவே இருக்க வேண்டும் ஏன் ௭னில் ஒளியின் ௭திர் தன்மை கரும்பொருளாக இருக்கலாம். இதுவரை கரும்பொருளை கேள்வி பட்டிருக்கிரோமே தவிர கண்டது இல்லை. ஒளியும் இருளும் கலந்த தன்மையை நாம் உணர்ந்திருப்பொம் ஆனால் ஒளியும் இருளும் இல்லாத தன்மையை கற்பனையில் அறியும் ஆற்றல் கூட நான் அறிந்தவற்றில் இதுவரை கற்பனை பண்ணப்படவில்லை. இருந்தால் அறியத்தரவும்.

Online shops

 உலகளாவிய ரீதியில் online மூலமான வியாபாரங்கள் அதிகரித்து நேரடியான கடைகள் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்லும்.  இதனால் கடைகள் 24 மணித்தியாலமும...