Wednesday, August 8, 2012

உயிர்க்கடிகாரம்

மனித உடலுக்குள் ஓர் உயிர்க்கடிகாரம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இதுதான் நீங்கள் எப்போது சாப்பிட வேண்டும், எப்போது தூங்கவேண்டும் என்பதை நிர்ணயிக்கிறது. இது ஆயிரக்கணக்கான ஜீன்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. உயிர்க்கடிகாரம் நம்மூளைக்குள் உள்ள பார்வை முடிச்சின் மேல் உள்ளது. இவை ஒளியால் மட்டுமல்ல மற்ற உறுப்புகள் மற்றும் உணவாலும் கூட கட்டுப்படுத்தப்படுகிறது. என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கிவிறிரி என்ற மூலக்கூறுதான், செல்களின் ஆற்றல் தேவையறிந்து உணவு வேண்டும் எனத் தூண்டுகிறதாம். செல்லில் போதுமான உணவிருந்தால், கிவிறிரி ‘ஆன்’செய்யப்பட்டுவிடும் உணவின் உயிர்க்கடிகாரத்துக்கும் வளர்சிதை மாற்றத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவேதான் ஷிப்டில் பணிபுரிபவர்களின் உயிர்க்கடிகாரம் சமனநிலை இழக்கிறது. பருமனகின்றனர், மிகை அழுத்தம் மாரடைப்பு நிகழ்கிறது என கண்டறியப்படுகிறது.

Friday, August 3, 2012

பிரம்மச்சார்யமா? தாம்பத்தியமா? - எது பாதை

உடலுறவு கொள்வது அவரவர்களுடைய உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவைப் பொறுத்து ஆளுக்கு ஆள் மாறு படும். சிலருக்குத் தினமும் உடலுறவு இல்லாமல் முடியாது. சிலருக்கு வாரத்திற்கு இரண்டு முறை, மற்றும் சிலருக்கு மாதம் இருமுறை இருந்தால் கூடப் போதும். அவரவர்களுடைய உடற்கூற்றைப் பொறுத்து உடலுறவின் தேவை ஏற்படும். உடலுறவு கொள்ளாத பிரம்மசாரிகளைவிடக் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டவர்களே அதிக ஆயுள் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். மனிதனுக்கு உணவுக்கு அடுத்தபடியாக உடலுறவு இரண் டாவது இடத்தை வகிக்கிறது. மனிதன் உணவு இல்லாமல் உயிர் வாழ முடியாது. அதைப் போல, உடலுறவு இல்லாமல் மனிதன் தொடர்ந்து வாழ முடியாது. அத்துடன் உடலும் உள்ளமும் வளமாய் இருந்தால் உயிர் உடலில் நீண்ட நாள் இருக்கும். உடலையும், மனத்தையும், வளமாய் வைத்திருக்க உடலுறவு உதவுகிறது என்பதை மருத்துவ விஞ்ஞானம் நிரூபிக்கிறது. எந்த மதமும் எந்தத் தத்துவமும் குடும்ப வாழ்க்கையை உடலுறவைத் தவறு என்று சொல்லவில்லை. சாதிக்குள்ளேயே திருமணம் செய்யாவிட்டால் தவறு ; பாலுறவு பற்றி எழுதுவது, பேசுவது, ஆராய்வது தவறு என்னும் பத்தாம்பசலிக் கொள்கை வேரூன்றியுள்ளது. இளைஞர்கள் தாங்களே பொருத்தமான இணையைத் தேடி நிர்ணயிக்க இயலவில்லை. மாறாக, வாழ்க்கைத் துணையைச் சாதியும் மதமும், உற்றாரும் உறவினரும், சொத்தும் வரதட்சணையுந்தாம் நிர்ணயிக்கின்றன. பொருத்தமான வாழ்க்கைத் துணை யைத் தாங்களே தேடி நிர்ணயித்துக் கொள்ள முடியாத பரிதாபகரமான சூழ்நிலை உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்ககு முன்பாக எழுதப்பட்ட தமிழ், சமஸ்கிருத நூல்களில் பாலுறவுபற்றிக் குறிப்பிட்டிருப்பது போல இன்று யாரும் எழுதத் துணியாததற்குக் காரணம் பாலியல் எழுத்தாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு விடுவோமோ என்று பயந்தான் காரணம். மக்கள் இன்னும் மனம் முதிர்ச்சி அடையவில்லை. காதலும், காமமும், உடலுறவும் வாழ்க் கையில் இன்றியமையாதவை. அவற்றைச் சொல்லவேண்டிய முறையில் சொன்னால் தான் மகாபாரதம், இராமாயணம், சாகுந்தலம், சங்கப் பாடல்கள், திருக்குறள் உட்பட எல்லா இலக்கியங்களையும் சுவைத்து அனுபவிக்க முடியும். மணமாகாத வாலிபர்களின் இச்சை யைத் தூண்டப் பச்சைபச்சையாக உடலுறவு களை வர்ணித்துச் சதை வியாபாரம் செய்யும் மலிவுப்பதிப்புகள், சாலையோரப் புத்தகக் கடைகளில் மறைத்து விற்கப்படுகின்றன. அவைகள் எல்லாம் ஆபாசமானவை. திருக்குறளில காமத்துப்பால் என்று பிரித்துத் தனியாகப் பாலுறவைப்பற்றி எழுதி யுள்ளார். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட காமசூத்திரத்தைத் தமிழில் அதிவீரராம பாண்டியன் கொக்கோகம் என்று எழுதியுள்ளார். இந்நூல், பாலுறவுபற்றி விரி வாகக் கூறுகிறது. வடநாட்டில் கஜுரா, கோனார்க் கோவிலில் உடலுறவு நிலையை அற்புதச் சிற்பங்களாக வடித்துள்ளனர். தென்னிந்தியக் கோவில்களிலும் இத்தகைய உடலுறவு நிலைச் சிற்பங்களைக் காணலாம். மதம், இதிகாசம், இலக்கியம், சிற்பம், சித்திரம் அனைத்திலும் பாலுறவு பற்றி எழுதப்பட்டுள் ளது. அது தவறானது என்றால் அவ்வாறு எழுதுவார்களா? மனித இனம் ஆதியிலிருந்து இன்றுவரை பாலுறவின் பற்று கொண்டிருக் கிறது. காரணம், அதில் கிடைக்கும் இன்பத் திற்கு ஈடான வேறு இன்பம் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. எல்லாப் பிரச்சினைகளையும், நோய்களையும் ஒரே ஒரு மருந்தால் தீர்க்க முடியுமா முடியும் ; அது குடும்ப வாழ்க்கையில் உள்ள உடலுறவு ஒன்றால்தான், தலைவலி, முதுகுவலி, இடுப்புவலி, மனநோய் எல்லா வற்றையும் தீர்க்க முடியும். உடலுறவுதான் உடலிலுள்ள தடுப்புச் சக்தியான இம்யூன் (Imune) என்னும் சக்தியைத் துரிதப்படுத்துகிறது. இதனால் அனைத்து உடல் வலிகளும், தசை வலிகளும் நரம்பு வலிகளும், மனநோயும் தீருகின்றன. ஒருவன் குடும்ப வாழ்க்கையில் உடலுறவு கொள்ளாதவனாய் இருந்தால் மனத்தில் இறுக்கமும் ஒரு வேகமான கோபமான நிலையும் ஏற்படும். இதற்குக் காரணம், உடலுறவு கொள்ளாததால் அட்ரினலின் (Adernalin) ஹார்மோன் சுரப்பது தான். உடலுறவு கொள்வதால் உயர் இரத்த அழுத்தம் இதய நோயைக் குறைத்து இரத்தத்தை விருத்தியடையச் செய்யும். பெண்களுக்கு மார்பில் கட்டி ஏற்படாது சளி பிடிக்காது; அடிக்கடி உடலுறவு கொள்வதால் தேவையான அளவு இரத்த ஓட்டம் அதிகரித்துப் பெண்களின் உடலிலுள்ள அனைத்து வலிகளும் தீர்ந்து விடும். உடலுறவின் போது ஹார்மோன் சுரப்பது தூண்டப்பட்டுப் பல விதமான இரசாயனப் பொருள்கள் உற்பத்தியாகின்றன. அவை வலி நிவாரணியாக, மருந்தாகப் பெண்களுக்கு அமைந்து, நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்படும். சரியான அளவில் அடிக்கடி உடலுறவு கொள்பவர்களுக்குச் செரிமானம் அதிகமாகிப் பசி எடுக்கும் ; நல்ல தூக்கம் வரும் ; அதனால் மன இறுக்கம், கவலை தீரும் ; மனத்தில் அமைதி, நிதானம், மகிழ்ச்சி ஏற்படும். நன்றி : “யோகக்கலையும் இயற்கை மருத்துவமும்” -நூல்.

ஞாபகசக்தி

சற்று முன் கேட்ட டெலிபோன் நம்பரை உடனே திருப்பிச் சொல்ல முடிகிறது. ஒரு மணிநேரம் கழித்து அதே நம்பர் மறந்துவிடுகிறது. ஆனால் நமது சொந்த டெலிபோன் எண், பிறந்த தேதி போன்ற நம்பர்கள் என்றும் மறப்பதில்லை. ஏன் இப்படி? நமக்கு இரண்டுவித ஞாபகசக்தி இருக்கிறது. தற்காலிக நினைவு மற்றது நிரந்தர நினைவு. நினைவுகள் யாவும் மூளையில் நரம்பு செல்களில் சேமிக்கப்படுகின்றன. ஒரு டெலிபோன் நம்பரைக் கேட்டதும் அதற்கான ஒரு நரம்புக்கூட்டம் உடனே அதைப் பதிவு செய்வதில் முனைகிறது. இந்த நரம்புக்கூட்டத்தை "ட்ரேஸ்' என்று (Trace)கூப்பிடுகிறார்கள். நமக்கு தற்காலிக நினைவுக்கென்று ஒரு ட்ரேஸும் அதே சமயம் நிரந்தர நினைவுக்கென்று இன்னொரு ட்ரேஸும் ஒரே சமயத்தில் மூளையில் உருவாகிறது. மூளையில், தற்காலிக ட்ரேஸானது காம்மா கதுப்பிலும் நிரந்தர ட்ரேஸ்கள் ஆல்ஃபா பீட்டா என்ற கதுப்பிலும் காணப்படுகின்றன. இதே அமைப்பு ஈக்களிலும் காணப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஒரு சம்பவத்தை அல்லது தகவலை முதல் முறையாக கேட்கும்போது அல்லது படிக்கும்போது அது இரண்டுவித டிரேஸிலும் பதிகிறது. தற்காலிக டிரேஸ் வேகமாக உருவானாலும் அது உடனே கலைந்து விடுகிறது. நிரந்தர டிரேஸ் மெல்ல ஆசுவாசமாக உருவாகிறது. அது முடிவடையவேண்டுமானால் மீண்டும் அதே சம்பவத்தை அல்லது படித்ததை நாம் அனுபவிக்க வேண்டும். நிரந்தர டிரேஸ் நரம்புக்கூட்டம், இரண்டாம் முறை, மூன்றாம் முறை தூண்டப்படும்போது அதன் டிரேஸ் முற்றுப்பெறுகிறது. முற்றுப் பெற்றதும் அது நிரந்தர நினைவாகிவிடுகிறது. தற்காலிக டிரேஸ் எத்தனை முறை தூண்டப்பட்டாலும், அது உடனே கலைந்துவிடுகிறது. ஈக்குக்கூட தற்காலிக, நிரந்தர நினைவுகள் இருக்கிறது என்று கோல்டு ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வுக்கூடத்தின் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஈயை சின்னக் குழாயில் வைத்து அதில் கெட்ட நாற்றமுடைய காற்றை அனுப்பும்போது கூடவே லேசாக மின்சார ஷாக் கொடுப்பார்கள். அதற்கப்புறம் ஈக்கு ஷாக் கொடுக்கும்போதெல்லாம் துர்நாற்றக் காற்றை அந்த ஈ எதிர்பார்க்கும். அல்லது துர்நாற்றக் காற்று வரும்போதெல்லாம் ஷாக் அடிக்குமோ என்று அஞ்சும். ஈயின் காம்மா கதுப்பிலும் ஆல்ஃபாபீட்டா கதுப்பிலும் இந்த அனுபவம் பதிகிறது என்று தெரிந்துகொண்டனர். நுட்பமான கத்தி மூலம் இந்த கதுப்புகளை ஒவ்வொன்றாக வெட்டி நீக்கும்போது அதற்கேற்ப தற்காலிக அல்லது நிரந்தர நினைவுகள் மறைவதைக் கவனித்தனர். ஒரு படி மேலே சென்று, நிரந்தர நினைவினை சேமிக்க உதவும் என்ஸைமினையும் அதற்கான ஜீனையும் கண்டுபிடித்தனர். என்ன ஆச்சரியம்! மனிதர்களுக்கும்கூட அதே ஜீனும் அதே என்ஸைமும் இருக்கிறது. நினைவினை சேமிக்கும் தந்திரம் ஈயில் தோன்றி பின் மனிதன் வரை வளர்ந்திருக்கிறது என்று தோன்றுகிறது. மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்கும் ஒரு சேதி; எதை நீங்கள் நிரந்தரமாக நினைவில் பதித்துக்கொள்ள விரும்புகிறீர்களோ அதை முதலில் தற்காலிகமாக நினைத்துப் பாருங்கள் மீண்டும் அதை மறுபடி மறுபடி மூன்று முறையாவது கொஞ்ச நேரம் இடைவெளிவிட்டு நினைவுகூட்டிப் பாருங்கள் அப்புறம் அது மறக்கிறதா என்று பாருங்கள். மறக்க மாட்டீர்கள் அதற்கு நான் கியாரண்டி.

Friday, July 27, 2012

ஆழ் மனம்,புற மனம்

1. உணர்வு மனம் (அல்லது புற மனம்) 2. உணர்விற்கப்பாற்பட்ட மனம் (அல்லது ஆழ் மனம்) மனிதரின் மனதின் முக்காற் பங்கினை உள்ளடக்கியிருப்பது இந்த உணர்ச்சிக்கப்பாற்பட்ட ஆழ் மனமே. சகல விதமான அபிலாஷைகள், எதிர்பார்ப்புகளைப் புதைத்து வைத்துள்ளது. இந்த ஆழ்மனம்தான் மனிதரது சகல விதமான பிரச்னைகளிற்கும் காரணம். பகுத்தறிவு பேசுவது மனிதரின் உணர்வு மனம். ஆனால் அவரது உணர்விற்கப்பாற்பட்ட மனமான ஆழ்மனதினிலே அவர் பேசும் பகுத்தறிவிற்கேற்ற கொள்கைகள், எண்ணங்கள் பதிந்திராவிட்டால்..அவர் எவ்வளவு பகுத்தறிவு வாதம் புரிந்தும் பயனில்லை.

Thursday, July 26, 2012

பிரபஞ்சத்தின் உருவம்

பிரபஞ்சத்தின் உருவ அமைப்பானது மூன்று விதமாகக் காணப்படுவதற்குச் சாத்தியமுள்ளது. இவற்றை அவர் முறையே 'மூடிய பிரபஞ்சம்', 'திறந்த பிரபஞ்சம்', 'தட்டையான பிரபஞ்சம்' என மூன்றாகப் பிரித்தார். 'மூடிய பிரபஞ்சம்' என்றாலென்ன? அது எப்படியிருக்கும்? மூடிய பிரபஞ்சத்திற்கு உதாரணமாக ஒரு கோளத்தின் அமைப்பையே குறிக்கலாம். கோளமொன்றின் வடிவம் எவ்விதம் வளைந்து காணப்படுகிறதோ அவ்விதமே இப்பிரபஞ்சமும் வளைந்து மூடிய நிலையில் இருப்பதற்குச் சாத்தியங்களுள்ளன. உண்மையில் ஒருவர் இவ்வகையான மூடிய பிரபஞ்சத்தில் நேர் கோட்டில் பயணம் செய்வாரென்றால் மீண்டும் தனது தொடக்க இடத்துக்கே வந்து விடுவார். இவ்வகையான நிலையினை நமது பூமியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை மிகவும் இலகுவாக விளங்கி விடும். உதாரணமாகப் பூமியின் மேற்பரப்பில் ஓரிடத்திலிருந்து பயணத்தைத் தொடங்குமொருவர் நேராக நடந்து செல்வாரேயானல் மீண்டும் தனது தொடக்குப் புள்ளிக்கே வந்து விடுவாரல்லவா? அது போல் தான் 'மூடிய பிரபஞ்சத்தி'னுள் பயணிப்பவரின் நிலையும். பிரபஞ்சத்தின் உருவ அமைப்பு பற்றிய அடுத்தவகை 'திறந்த வகைப் பிரபஞ்சம்' ஆகும். குதிரையொன்றின் முதுகில் அமர்ந்து செல்லப் பாவிக்கபப்டும் 'சேணம்' போல் அதனது அமைப்பிருக்கும். இவ்வகையான 'திறந்த பிரபஞ்ச'த்திற்கு முடிவென்பதேயில்லை. இவ்வகையான பிரபஞ்சத்தில் ஓரிடத்தில் பயணத்தைத் தொடங்குபவர் நேராகச் செல்லும் பட்சத்தில் கூட மீண்டும் தனது தொடக்க இடத்துக்குத் திரும்புவதேயில்லை. போனவர் போனவரே. மூன்றாவது வகையான பிரபஞ்சத்தின் வடிவைத் 'தட்டை'யானதெனக் குறிப்பிட்டோமல்லவா? உண்மையில் இவ்வகையான பிரபஞ்ச வடிவ அமைப்பானது மூடிய வடிவ அமைப்புக்கும், திறந்த வடிவ அமைப்புக்கும் இடைப்பட்ட வகையிலான வடிவ அமைப்பினச் சேர்ந்தது. இவ்வகையான வடிவை முடிவற்று நீண்டிருக்கும் மேசை ஒன்றின் மேற்பரப்புக்கு ஒப்பிடலாம்.

மூடிய நேர வளையம்

பிரிட்டிஷ் பெளதிகவியல்/வானியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹார்கின்ஸ்ஸின் (Stephen Hawking) கருத்து என்னவென்றால்...நமது பிரபஞ்சத்தின் இருப்பானது மூடிய நேர வளையத்தை ஒத்தது. இவரது கருத்துப்படி பெருவெடிப்பில் உருவாகும் பிரபஞ்சமானது இறுதியில் ஒரு குறிப்பிட்ட நிலையில், அதாவது பிரபஞ்சத்தின் விரிவடையும் வேகமானது அதியுயர் நிலையினை அடைந்ததும் அதுவரையில் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த நேரமானது பின்னோக்கி செல்லத் தொடங்கும். எதுவரை இவ்விதமாக நேரமானது பின்னோக்கிச் செல்லுமென்றால் இன்னுமொரு பெருவெடிப்பு ஏற்படும் வரையில்தான். அதன் பின்னர் நேரமானது மீண்டும் முன்னோக்கி நகரத் தொடங்கும். இவ்விதமாக இப்பிரபஞ்சமானது மீண்டும் மீண்டும் வெடித்துக் கொண்டேயிருக்கும். உண்மையில் இத்தகைய பிரபஞ்சத்தில் வசிக்கும் ஒருவருக்கு நேரம் முன்னோக்கிச் செல்கிறதா அல்லது பின்னோக்கிச் செல்கிறதா என்பது கூடத் தெரியாது. ஏனெனில் அவரால் நேரம் முன்னோக்கிச் செல்வதாக மட்டும் தான் உணர முடியும். உண்மையில் தற்போது நேரம் முன்னோக்கிச் செல்கிறதா அல்லது பின்னோக்கிச் செல்கிறதா என்பது கூடச் சரியாகத் தெரியாது. இவ்விதமாக இருக்கிறது ஸ்டீபன் ஹார்கின்ஸ்ஸின் சிந்தனையின் போக்கு. இன்னும் சில கோட்பாடுகளோ ஆரம்பத்தில் ஒரு பெரு வெடிப்பல்ல பல பெருவெடிப்புகள் ஏற்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிவிக்கின்றன.

Tuesday, July 24, 2012

கடவுள் காணோமாம்

அந்த கிராமத்தில் எந்த பொருள் காணாமல் போனாலும் அல்லது ஏதாவது பிரச்சினை என்றால் ஊரே அந்த இரண்டு சகோதர சிறுவர்களை தான் விசாரிக்கும் ,அந்த அளவுக்கு அவர்கள் famous ..அவர்களின் குறும்பை பொறுக்க முடியாத அவர்களின் தாய் நேரே அவர்கள் இருவரையும் கிராமத்திற்கு புதுசாக வந்திருந்த பாதிரியாரிடம் கொண்டு போய் விட்டாள்...அவர் முதலில் பெரியவனை மட்டும் அழைத்து இருக்க சொல்லி விட்டு சிறியவனை வீட்டுக்கு போக சொன்னார், பாதிரியார் பெரியவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்... பாதிரியார்:my son,Where is God? அதற்கு அந்த சிறுவன் ஏதும் சொல்லாமல் நிற்க,சற்றே கோப பட்ட பாதிரியார் மீண்டும், உரத்த குரலில்... "Where is God"என்றார்.. இந்த முறை சிறுவனின் முகத்தில் லேசான கலவரம் எட்டி பார்த்தது...ஆனாலும் அமைதியாகவே இருக்க, இன்னும் கோப பட்ட பாதிரியார், "Where is God "என்று அந்த அறையே அதிரும் வண்ணம் கத்த, சடாரென வேகம் எடுத்த சிறுவன் நேரே ஓடினான் ஓடினான்,அவனின் தம்பியிடம் ஓடினான்,சென்று சொன்னான் , "டேய் இந்த தடவை நாம் உண்மையிலேயே பெரிய பிரச்சினையில் மாட்டி கொண்டோம் என்றான்" என்ன என்று மற்றொருவன் அமைதியாக கேற்க,அவன் சொன்னான்.... "இந்த தடவை கடவுள் காணோமாம் எல்லோரும் நாம் தான் எடுத்து இருப்போம் என்று சந்தேக படுகிறார்கள்"

Sunday, July 22, 2012

இருள் பற்றி இன்னும் விழங்௧வில்லை

சூரியனில் சுய ஓளி இருக்கும் வரை சூரியனுக்கு இருள் ௭ன்பதை உணர்த்தவோ விழக்கவோ இயலாது. இருள் ௭ன்பது ஒளியின் ௭திர் தன்மையோ அல்லது ஒளி இல்லாத நிலையாகவோ இருக்கலாம். ஒளி இருள் இல்லாத தன்மையாகவே இருக்க வேண்டும் ஏன் ௭னில் ஒளியின் ௭திர் தன்மை கரும்பொருளாக இருக்கலாம். இதுவரை கரும்பொருளை கேள்வி பட்டிருக்கிரோமே தவிர கண்டது இல்லை. ஒளியும் இருளும் கலந்த தன்மையை நாம் உணர்ந்திருப்பொம் ஆனால் ஒளியும் இருளும் இல்லாத தன்மையை கற்பனையில் அறியும் ஆற்றல் கூட நான் அறிந்தவற்றில் இதுவரை கற்பனை பண்ணப்படவில்லை. இருந்தால் அறியத்தரவும்.

Sunday, June 24, 2012

joke

ஒரு ஆள் ஹைவே ஒன்றில் மிகவும் ஸ்லோவாக காரை ஒட்டிக் கொண்டு இருந்தான். அவனை அணுகிய ஒரு ட்ராபிக் இன்ஸ்பெக்டர், சார், கொஞ்சம் வேகமாக ஒட்டுங்கள் என்றார். அதற்கு அவன் 'அங்கே பாருங்க 21 என்று ஹைவேயில் எழுதி இருக்கிறது' என்றான் 'அது ஸ்பீட் லிமிட் இல்லை சார்,அதுதான் ஹைவே நம்பர், எனவே அதைப் பார்த்து வண்டி ஓட்ட வேண்டாம்' என்ற இன்ஸ்பெக்டர் , பின் சீட்டில் இருந்த அவன் மனைவியை எதேச்சையாக கவனித்து, 'அது சரி சார், இந்த அம்மா ஏன் இப்படி உடம்பெல்லாம் நடுங்கி வியர்த்து வழிந்து கொண்டு இருக்காங்க' என்று கேட்டார் 'ஒ அதுவா, கொஞ்சம் முன்னாடி தான் ஹைவே நம்பர். 210 இல் இருந்து பிரிந்து வந்தோம் ' என்றான் அவன்.

தர்கம் சில

கணிதப் பேராசிரியர் ஒருவர் ஏர்போர்டில் பிடிக்கப்பட்டார். பெட்டியின் உள்ளே பயங்கரமான பாம் வைத்திருந்தார். 'இதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் ப்ரொபெசர்?' என்றார் பாதுகாப்பு அதிகாரி. 'பயணிகளின் பாதுகாப்பு கருதி தான் இதை எடுத்து வந்தேன். ஒரே விமானத்தில் இரண்டு பேர் பாம் வைத்திருப்பதற்கான நிகழ்தகவு கிட்டத்தட்ட பூஜ்ஜியம்' என்றார் அவர். முன் அட்டையில்: பின் அட்டையில் இருக்கும் வாசகம் உண்மை. பின் அட்டையில்: முன் அட்டையில் இருக்கும் வாசகம் பொய் ஒருவன் பொய் சொல்லும் போதெல்லாம் அவன் மூக்கு நீள்கிறது. 'என் மூக்கு இப்போது நீள்கிறது' என்று அவன் சொல்கிறான். இப்போது என்ன ஆகும்? -ஒவ்வொன்றுக்கும் எதிர் உண்டு. இதன் படி 'ஒவ்வொன்றுக்கும் எதிர் உண்டு' என்ற வாக்கியத்திற்கும் எதிர் உண்டு. எனவே ஒவ்வொன்றுக்கும் எதிர் இல்லை.

Friday, June 22, 2012

இரட்டை விண்மீன்

இரட்டை விண்மீன் (binary star) என்பது தமது ஒரே பொது நிறை மையத்தைச் சுற்றி வரும் இரண்டு விண்மீன்களைக் கொண்ட ஒரு விண்மீன் தொகுதி ஆகும். வெளிச்சமான விண்மீன் முதன்மையானது எனவும் மற்றையது அதன் துணை விண்மீன், அல்லது துணை எனவும் அழைக்கப்படுகிறது. வானத்தில் சில விண்மீன்கள் இரட்டையாக தென்படும். ஆரம்பத்தில் மானிடர் இது காட்சிப் பிழை என நினைத்ததுன்டு. ஆனால் அவை உண்மையாகவே இரட்டை விண்மீன்கள் என்று பின்னர் தான் கண்டறியப்பட்டது. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Eclipsing_binary_star_animation_2.gif

சதுரங்கம்

தன் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை அதிகம் மாறாத ஒரே விளையாட்டு சதுரங்கம் என்கிறார்கள். என்னதான் இந்த விளையாட்டு மனிதனுள் இருக்கும் போர்க்குணத்தை, வன்முறையை அதிகரிக்கிறது (எப்படா அடுத்தவனை வெட்டலாம்) என்று ஒரு சாரார் குற்றம் சாட்டினாலும் செஸ் பொதுவாக மனிதனின் புத்திக் கூர்மையை, பிரச்சனைகளை சுலபமாகத் தீர்க்கும் Problem solving skill களை ,முடிவெடுக்கும் திறமையை, பின்னால் வரும் சிக்கல்களை முன்பே ஊகிக்கும் திறமையை வெகுவாக வளர்க்கிறது என்கிறார்கள்.முடிந்தால் பள்ளிகளில் செஸ் விளையாட்டை கட்டாயமாக்குவது நல்லது. விஸ்வநாதன் ஆனந்த் அளவு சாம்பியன் ஆக வேண்டும் என்ற குறிக்கோள் இல்லாவிட்டாலும் CHESS IS FUN !

Sunday, March 18, 2012

காதல் ரோஜாவே

அன்பின் காதல் ரோஜாவே!!!!!!!!!
வாழ்கை சிறையில் ஆயுள் கைதியாய்
வாழவேண்டும் என்ற கட்டாயத்தின் பெயரில்
ஏதோ ஒரு சில வரிகள்
ஊனக்கு என் சார்பாக
ஏதோ பத்திரிகையை போலவேனும் படித்துவிடு
வாழ்கை ரெம்ப கசக்கிறது
தனிமை இன்பமழிக்கிறது
இரவில் தனிமை இதமாக இருக்கிறது
பெய்யும் பனியோ எறிக்கும் நிலவோ
காலை சூரியனோ மாலை தென்றலோ
எதுவும் சந்தோ'ம் தரவில்லை
ஆனால் சந்திக்க தவறவில்லை
ஏதோ
மின்னலை போலவேனும் நீ
வரகூடும் என்பதற்காக
அடர்ந்த காடு ஆனால் மரங்களில் இலை இல்லை
ஆழ் கடல் ஆனா கடலில் அலை இல்லை
புரந்த வயல் ஆனால் எங்கும் பசுமை இல்லை
ஏதோ உயர்ந்த வாழ்கையில் நீ
இருப்பாயா?
இருந்தாயா?
இருக்கிறாயா?
இல்லையா?
ஏதோ இன்னும் சில வருடங்கள் சந்தித்து பார்போமென............................

Friday, February 3, 2012

தங்கம் உருவான கதை


















தங்கம் விண்ணிலிருந்து வந்தது

தங்கம் விண்ணிலிருந்து வந்தது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

தங்கம் மற்றும் பெருமதிப்பு வாய்ந்த தனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வந்தன என்பதுதான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி.

இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். கீரீன்லாண்டில் நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் படிமங்களில் இருந்த ஐசோடோப்புகள், பூமியிலிருந்து உருவான ஐசோடோப்புகளிலிருந்து தெளிவாக மாறுபட்டிருந்ததை பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே தங்களது இந்தக் கண்டுபிடிப்பானது, நாம் வாழும் பூமி சுமார் இருநூறு மில்லியன் வருடங்கள் பழமையானதாக இருக்கும் போது, அண்ட வெளியிலிருந்து வந்த மிகப்பெரிய எரிகற்களின் மோதல் காரணமாக, இன்று நாம் பயன்படுத்தும் பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் பூமியை வந்தடைந்தன என்கிற கோட்பாட்டை உறுதிபடுத்துகின்றது என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கத் துகள்கள்

மண்ணுடன் கலந்துள்ள தங்கத் துகள்கள்

பூமியின் ஆரம்பகாலங்களில் இந்த மோதல்கள் காரணமாக கொதித்து உருகிய நிலையில் இருந்த புவியின் மையப் பகுதிக்குள் தங்கம் மற்றும் இதர பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் மூழ்கின என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன.



ஆனால் நாம் நமது திருமண மோதிரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் தங்கமானது எப்படி உருவானது என்கிற கதை இன்னமும் ஆச்சரியாமாக உள்ளது.

இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை பார்த்திராத வகையில், அனுவின் ஒரு உட்கருவான நியூட்ரான்களின் மிகச் சக்தி வாய்ந்த மோதல்களிலேயே நாம் இன்று பயன்படுத்தும் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
முக்கியச் செய்திகள்
அணுவிலும் சிறிய துகள்கள் சில ஒளியை விட அதிகமான வேகத்தில் பயணிக்கின்றன என்று அண்மையில் காட்டிய பரிசோதனையை வேறு ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் செய்து பார்த்தபோது ஆம் துகள்கள் ஒளியை விட வேகமாகப் பயணிக்கின்றன என்ற முடிவேதான் இம்முறையும் வந்துள்ளன.

ஒளியின் வேகம்தான் இந்தப் பிரபஞ்சத்தின் அதிகபட்ச வேகம் அதைவிட வேகமாக எதுவாலும் பயணிக்க முடியாது என்பது பல காலமாக அறிவியல் சமூகம் நம்பிவரும் விடயம்.

அப்படியிருக்க கடந்த செப்டம்பரில் முதல் தடவையாக இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியானபோது அதனைப் பலரும் சந்தேகித்தனர்.

அணுவாராய்ச்சிக்கான ஐரோப்பிய மையத்தின் நிபுணர்கள் மாற்றியமைக்கப்பட்ட வகையில் இந்த பரிசோதனையை செய்து பார்த்தனர்.

நியூட்ரினோஸ் என்று சொல்லப்படுகிற அணுவிலும் சிறிய துகள்கள் ஒளியை விட சற்று அதிமான வேகத்தில் செல்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்கொண்டு பரிசோதனைகள் தொடரவுள்ளன.
அறிவியல்: இருண்ட பொருள் வரைபடம் தயார்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 ஜனவரி, 2012 - 17:48 ஜிஎம்டி



பேரண்டத்தின் கண்ணுக்கு தெரியாத இருண்ட பொருள்

பேரண்டத்தின் கண்ணுக்குத் தெரியாத இருண்ட பொருள்

யுனிவர்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பிரபஞ்சம் அல்லது பேரண்டத்தில் பெரும்பகுதியாக இருப்பது டார்க் மேட்டர் என்கிற விவரிக்கமுடியாத இருண்ட பொருள். நம் கண்களால் சாதாரணமாக பார்க்கமுடியாத இந்த இருண்டபொருள் குறித்து அறிவியல் உலகில் நீண்டநாட்களாகவே அறியப்பட்டிருந்தாலும், பேரண்டத்தில் இந்த விவரிக்க முடியாத இருண்ட பொருள் எவ்வளவு தூரம் பரவியிருக்கிறது, பேரண்டத்தின் எந்தெந்த பகுதிகளில் இந்த இருண்டபொருள் காணப்படுகிறது என்பது குறித்த வரைபடம் எதுவும் இதுவரை தயாரிக்கப்படவில்லை.

அப்படியானதொரு வரைபடம் தயாரிப்பதில் வானியல் விஞ்ஞானிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருப்பதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறார்கள்.

அமெரிக்க வானியல் ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் இத்தகைய வரைபடம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். இது விவரிக்கமுடியாத இருண்ட பொருள் குறித்த முழுமையான வரைபடம் இல்லை என்றாலும், விவரிக்க முடியாத இருண்ட பொருள் குறித்து இதுவரை தொகுக்கப்பட்ட வரைபடங்களிலேயே இது தான் பெரிய வரைபடமாக பார்க்கப்படுகிறது.

ஹவாயில் இருக்கும் பிரத்தியேக வான் தொலை நோக்கியை பயன்படுத்தி இந்த வரைபடத்தை இவர்கள் தயாரித்திருக்கிறார்கள். இதன்மூலம் நட்சத்திரங்கள் மற்றும் விண்வெளியில் இந்த இருண்ட பொருள் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை சாதாரண மனிதர்களும் பார்க்க படிக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த இருண்டபொருள் கண்ணுக்கு தெரியாது என்பதால், இதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு புகைப்பட லென்சை பயன்படுத்தி இந்த வரைபடத்திற்கு தேவையான புகைப்படங்களை இவர்கள் எடுத்தார்கள்.
பேரண்டத்தின் இருண்ட பொருள்

பேரண்டத்தின் இருண்ட பொருள்

பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருளும், தனது எடைக்கு ஏற்ப, தன்னைச்சுற்றியுள்ள இடத்தையும் நேரத்தையும் வளையச்செய்யும் அல்லது மாற்றியமைக்கும் என்பது அடிப்படை விதி. இந்த விதியின் அடிப்படையில் பார்த்தால், விவரிக்க முடியாத இருண்டபொருளானது, தன்னைக்கடந்து செல்லும் ஒளிக்கீற்றுக்களை வளைந்து செல்லும்படி செய்கிறது. பூமிக்கு வந்து சேரும் ஒளிக்கீற்றுக்களின் பாதையை வைத்துப்பார்க்கும் போது பிரபஞ்சத்தின் எந்த பகுதியில் இந்த இருண்ட பொருள் இருக்கிறது என்பதை அடையாளம் காண முடியும். அப்படித்தான் இந்த விஞ்ஞானிகள் பேரண்டத்தின் எந்தெந்த பகுதிகளில் இந்த விவரிக்கமுடியாத இருண்ட பொருள் இருக்கிறது என்பதை அடையாளம் கண்டு வரைபடம் தயாரித்திருக்கிறார்கள்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பிரபஞ்சத்தின் மிகச்சிறியதொரு பகுதியைத்தான் இவர்கள் அடையாளம் கண்டிருக்கிறார்கள். அதாவது நூறுகோடி ஆண்டுகள் ஒளி பயணிக்கக்கூடிய தூரத்தில் இருக்கும் வானத்தில் இருக்கும் இருண்டபொருளைத்தான் இவர்கள் தற்போது அடையாளம் கண்டிருக்கிறார்கள். அறுநூறு கோடி ஆண்டுகள் ஒளி பயணிக்கக்கூடிய தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் வெளிப்படுத்திய ஒளியைத்தான் இந்த ஆய்வாளர்கள் தற்போது ஆய்வு செய்தார்கள்.

இவர்கள் பார்த்த இந்த குறிப்பிட்ட பேரண்டத்தின் ஒரு பகுதியில், கேலக்ஸிஸ் எனப்படும் அண்டங்களை சுற்றி இந்த விவரிக்கமுடியாத இருண்ட பொருளானது சங்கிலித்தொடராக காணப்படுவதாகவும், பிறகு திடீரென ஒன்றுமே இல்லாத சூனியப்பிரதேசத்தில் இது செ
முடிவதாகவும்இவர்கள்தெரிவித்திருக்கிறார்கள்
மனித ரோமத்தை விட பத்தாயிரம் மடங்கு மெலிதான மின் கம்பிகளை உருவாக்குவதில் ஆஸ்திரேலியாவின் கணினி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.

கணினிகள் நாளுக்கு நாள் சிறிதாகிவருகிறன என்றாலும் அவற்றின் சக்தி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

கணினியில் பயன்படுத்தப்படும் உட்கூறுகளும் சின்னதாகிக்கொண்டே வருகின்றன.

அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தாத, அதிக வெப்பத்தை வெளியிடாத, அதிகம் மின் விரயம் செய்யாத கணினி உட்பொருட்களை உருவாக்குவதென்பது ஆராசய்ச்சியாளர்களுக்கு சிக்கல் நிறைந்த விஷயமாகவே இருந்து வந்துள்ளது.

அந்த சிக்கலைத் தீர்ப்பதில் பெரியதொரு முன்னேற்றம் கண்டிருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

நான்கு அணுக்கள் மட்டுமே அகலமும் ஒரு அணு மட்டுமே உயரமும் கொண்ட நுண்ணிய மின் கம்பிகளை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இவை உலோகக் கம்பிகள் அல்ல, சிலிகானால் ஆனவை.

சிலிகான் அணுக்களுடன் பாஸ்பரஸ் அணுக்களை கலந்து இந்த நுண்கம்பி உருவாக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யும்போது, கம்பியின் மின் கடத்தும் மையப்பகுதி பாதுகாக்கப்படும் அதே நேரம் கடத்தப்படும் மின்சாரம் அதிகம் விரயமும் ஆவதில்லை.

குவாண்டம் கணினிகள் என்று சொல்லப்படுகின்ற அதிவேகத் திறன் கொண்ட அடுத்த தலைமுறைகளைக் கணினிகளை உருவாக்குவதற்கு இந்த நுண்கம்பிகள் மிக அவசியமாகத் தேவைப்படும்.

Thursday, February 2, 2012

அணுகுண்டு கண்டுபிடிப்பு

முதன்முறையாக அணுஆயுதம் அமெரிக்காவில், பல்வேறு ஐரோப்பிய நாடுகளை சார்ந்த புலம் பெயர்ந்த அறிவியலாளர்களாலும், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளின் கூட்டுமுயற்சியாலும், இரண்டாம் உலகப்போரின்போது Manhattan Project என்ற பெயரில் நடந்த இரகசிய ஆராய்ச்சிகளின் விளைவாக உருவாக்கபட்டது. முதல் அணுஆயுதம் ஜெர்மானிய நாசிகளுடன் ஏற்பட்ட ஆயுதப்போட்டியின் விளைவாக உருவாக்கப்பட்டாலும், ஜப்பானியர்களுக்கு எதிராக ஜப்பானிய நகரங்களான இரோசிமா, நாகசாகி மீது பிரயோகிக்கப் பட்டது.

Wednesday, February 1, 2012

ஒருவன்: நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா...
மற்றவன்: பெண் அவ்வளவு அழகா?
ஒருவன்: இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா...

JJJJJ

தரகர்: பொண்ணு சிரிச்சா கன்னத்துல குழி விழும்...
பையனின் தந்தை: பொண்ணுக்கு பல் இல்லைங்கிறதை நாசூக்கா சொல்றீங்களா...?

JJJJJ

ஒருத்தி: இலவசம் என்றால் என் கணவர் எதையும் விட மாட்டார்...
மற்றொருத்தி: அப்படியா?
ஒருத்தி: ஆமாம்! இப்பப் பாரேன்... இலவச திருமணம் செய்துக்கிட்டு வந்திருக்கிறார்...

JJJJJ

ஒருவர்: கலப்புத் திருமணம் செய்தால் அரசாங்க உதவிகள் கிடைக்குமின்னு சொன்னாங்க... ஆனால் நீங்க அரெஸ்ட் செய்ய வர்றீங்களே...
போலீஸ்: அதுக்காக ஒவ்வொரு ஜாதியிலேயும் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துக்கச் சொல்லியிருக்கா...

JJJJJ

ஒருவர்: கல்யாணப் பத்திரிகையிலே பொண்ணோட தங்கை பெயர்களைப் போட்டு வயசையும் போட்டிருக்கிறீர்களே...?
மற்றவர்: ஆமாங்க... அடுத்து கல்யாணத்துக்கு பொண்ணுங்க இருக்கிறாங்கங்கிறத தெரிவிக்கத்தான்...

Tuesday, January 31, 2012

தணிக்கைக்கு தயாரானது ப்ளாக்கர்
via ப்ளாக்கர் நண்பன் by Abdul Basith on 1/31/12

பதிவுலகம் முழுவதும் ஒருவித சோகம் பரவியுள்ளது. அதற்கு காரணம் கூகுள் இன்று சத்தமில்லாமல் ப்ளாக்கர் தளங்களில் செய்த ஒரு மாற்றம் தான். அதாவது இலவச ப்ளாக்கர் தளங்களில் உள்ள .blogspot.com என்னும் முகவரியினை சில நாடுகளில் மட்டும் .com என்பதற்கு பதிலாக .in, .com.au என்ற முகவரிகளாக மாற்றியுள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணங்களைப் பற்றியும், இதன் விளைவுகளை பற்றியும் பார்ப்போம்.

ப்ளாக்கர் தளம் இதுவரை உலகம் முழுவதும் இலவச ப்ளாக்கர் தளங்களில் .com என்ற டொமைனை பயன்படுத்திவந்ததை மாற்றி இனி அந்தந்த நாடுகளுக்கான டொமைன்களை பயன்படுத்தும். இது Country-code top level domain எனப்படும். உதாரணத்திற்கு ஒருவர் உங்கள் ப்ளாக்கை இந்தியாவிலிருந்து பார்க்கும்போது .blogspot.in என்ற முகவரிக்கும், ஆஸ்திரேலியாவிலிருந்து பார்த்தால் .blogspot.com.au என்ற முகவரிக்கும் மாறிவிடும்.

இதுவரை (இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட) சில நாடுகளுக்கு மட்டும் இந்த மாற்றத்தை கொண்டுவந்ததாக ப்ளாக்கர் தளம் கூறுகிறது. விரைவில் அதிகமானநாடுகளில் இந்த மாற்றங்களை கொண்டுவரப்போவதாகவும் அறிவித்துள்ளது.

ஏன் இந்த திடீர் மாற்றம்?

சமீப காலமாக இணையத்தளங்களில் வரும் செய்திகளை தணிக்கை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுவதை பார்த்திருப்போம். நமது இந்திய நீதிமன்றம் கூட கூகுள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களை தணிக்கை செய்ய வலியுறுத்தியது. இது போல் தணிக்கை செய்ய சொல்லி கோரிக்கை வந்தால் ப்ளாக்கர் தளங்களில் உள்ளவற்றை எளிதாக தணிக்கை செய்வதற்காகவே இந்த மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.

இதன் மூலம் சில கருத்துக்களை நீக்குமாறு ஒரு நாடு கோரிக்கை வைத்தால் அந்த நாடுகளில் மட்டும் அந்த கருத்துக்கள் கொண்ட பதிவுகளை/தளங்களை நீக்கிவிடும். மற்ற நாடுகளில் அந்தக் கருத்துக்கள் உள்ள பதிவுகள்/தளங்கள் பார்க்கும்படி இருக்கும்.

ஆனால் கஸ்டம் டொமைங்களில் உள்ள தளங்களுக்கு இந்த மாற்றம் வராது. அதற்கான தணிக்கைப் பற்றி தெரியவில்லை.

இந்த மாற்றத்தின் மூலம் தேடுபொறிகளில் உங்கள் தளங்களின் மதிப்பு பாதிக்காது என்ரம் தெரிவித்துள்ளது.

தேடுபொறிகளில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும் இந்த மாற்றத்தினால் .blogspot.com முகவரியில் இயங்கும் இலவச தளங்களுக்கு சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அலெக்ஸா மதிப்பு:

இணையதளங்களை பட்டியலிடும் அலெக்ஸா மதிப்பு இதனால் சரிந்துவிடும். அதிலும் குறிப்பாக தமிழ் தளங்கள் உள்பட இந்திய தளங்களின் மதிப்பு வெகுவாக குறைந்துவிடும். காரணம் .blogspot.in, .blogspot.com.au போன்ற முகவரிகளில் இயங்கும் நம்முடைய தளங்களின் மதிப்புகள் எல்லாம் நம் தளங்களின் மதிப்புகளாக கணக்கிடாமல் blogspot.in, blogspot.com.au என்ற தளங்களுக்கு சென்றுவிடும்.

நம் தளங்களுக்கு அதிக வாசகர்கள் வருவதே இந்தியாவிலிருந்து தான். இந்தியாவில் நம்முடைய முகவரி மாறுவதால் அலெக்ஸா மதிப்பு வெகுவாக குறையும் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை அலெக்ஸா தளம் மாற்றம் கொண்டுவந்தால் மாறலாம்.


தமிழ்மணம் பிரச்சனை:

இந்த மாற்றத்தினால் ஏற்படும் அடுத்த பாதிப்பு தமிழ்மணத்தில் இணைப்பதில் ஏற்படும் பிரச்சனை. இதுவரை .com முகவரியை தமிழ்மணத்தில் இணைத்திருப்பீர்கள். அப்படி இணைத்திருந்தால் .com அல்லாத மற்ற முகவரியில் இருக்கும்போது ஓட்டுப்பட்டை வேலை செய்யாது. ஒருவேளை நீங்கள் தமிழ்மணத்தில் .in. .com.au போன்ற முகவரிகளை சமர்ப்பித்தால் மற்ற நாடுகளில் ஓட்டுபட்டைகள் வேலை செய்யாது. எப்படியிருந்தாலும் தமிழ்மணத்தில் பிரச்சனை தான்.

தமிழ்மணம் மட்டுமின்றி மற்ற திரட்டிகளிலும் இந்த பிரச்சனை உள்ளது.

Follower Gadget:

நீங்கள் Friendconnect மூலம் follower gadget வைத்திருந்தால் அதிக நாடுகளில் இந்த gadget தெரியாது. அதனால் Blogger Layout பகுதியிலிருந்து மட்டும் Add a Gadget மூலம் இதனை சேர்க்கவும்.

கவனிக்க: நேரமின்மையினால் அவசரமாக எழுதப்பட்ட பதிவு இது. இதில் தவறிருந்தால் இறைவன் நாடினால் நாளை சரி செய்கிறேன். மேலும் தங்கள் பின்னூட்டங்களுக்கும் இறைவன் நாடினால் நாளை பதில் அளிக்கிறேன்.
பிளாக்கர் வலைபூக்களில் கூகுளின் அதிரடி மாற்றம் - அலெக்சா ரேங்க் காலி
via வந்தேமாதரம் by Sasikumar on 1/30/12

கூகுள் வழங்கும் பிளாக்கர் தளத்தின் மூலம் வலைப்போக்கள உருவாக்கி பயன்படுத்தி நம் அனுபவங்களையும், கருத்துகளையும் வாசகர்களிடையே பகிந்து வருகிறோம். கூகுள் தனது சேவைகளில் அடிக்கடி ஏதாவது சில மாற்றங்களை செய்து வருவது இயல்பு. அந்த வகையில் பிளாக்கர் வலைபூக்களில் ஒரு அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இது வரை நம் பிளாக்கரின் வலைபூக்களின் URL .com முடியும் படி இருக்கும் ஆனால் இனி வலைப்பூக்களின் URL .in என முடியும் படி இருக்கும்.

உதாரணமாக
முன்பு - www.vandhemadharam.blogspot.com
இப்பொழுது - www.vandhemadharam.blogspot.in

இந்த மாற்றத்தை பற்றி கூகுள் எந்த அறிக்கையையும் இது வரை வெளியிட வில்லை. ஆதலால் இந்த மாற்றங்கள் இந்திய வலைபூக்களில் மட்டும் தான் ஏற்ப்பட்டு இருக்கிறதா இல்லை மற்ற நாட்டினருக்கும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என எந்த தகவலும் இல்லை.

இந்த மாற்றத்தினால் இதுவரை வலைப்பூக்கள் பெற்று இருந்த அலெக்சா மறைந்து விட்டது. பழைய படி ஒரு கோடியில் இருந்து ஆரம்பிக்கிறது. இது அனைவருக்கும் பெறும் ஏமாற்றத்தை அளித்து உள்ளது. குறிப்பாக கடின உழைப்பால் அலேக்சாவில் முன்னணியில் இருந்த கேபிள் சங்கர், சிபி போன்றோரின் அலெக்சா ரேங்க் போய் விட்டது. ஆனால் வலைப்பூக்களுக்கு கஸ்டம் டொமைன் பயன்படுத்தி வந்த வலைப்பூக்களுக்கு எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தி.

பழைய முகவரியில் இருந்து புதிய முகவரிக்கும் தானாகவே redirect ஆவதால் நம் தளத்திற்கு வரும் வாசகர்கள் குறைய வாய்ப்பில்லை என்பதால் இரண்டு மாதங்களில் அலெக்சா ரேங்க் பழைய நிலைமைக்கு வந்துவிடும். மற்றும் பாலோயர்ஸ், Email subscriber வசதிகளிலும் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை. பழைய படியே இருக்கும்.


Note: வெளிநாட்டு நண்பர்கள் வலைப்பூக்கள் எந்த URL முடிகிறது என கூறவும்.
யாரும் அறியா "அந்த" ரகசியம்? உங்களுக்காக (Perfect-Relationships )

பென்சில் : ஸாரி
ரப்பர் : ஸாரி எதுக்கு? நீ ஒன்றும் தப்பி ஏதும் பண்ணவில்லையே?
பென்சில் ; இல்லை. நான் எப்பல்லாம் தப்பு பண்ணிகிறேனோ அப்பவெல்லாம் நீ வந்து அழித்து விடுகிறாய். எனது தவறை எல்லாம் மறைய செய்யும் போது நீயும் சிறிதுசிறிதாக கரைய தொடங்குகிறாய். என்னால் நீ காயப்படுவதினால்தான் நான் ஸாரி சொல்லுகிறேன்.
ரப்பர் : அது உண்மைதான். ஆனால் அது பற்றி எனக்கு கவலையில்லை. நான் பிறந்ததே அதற்குதான். நீ எப்போது எல்லாம் தவறு செய்கிறாயோ அப்போது எல்லாம் உனக்கு உதவுவதற்க்காகத்தான் நான் பிறந்தேன். எனக்கு தெரியும் ஒரு நாள் நான் தேந்தே அழிந்து போய்விடுவேன். நீயும் எனக்கு மாற்றாக புதிய ஓன்றை கொண்டு வந்துவிடுவாய். எனக்கு என் கடமையை செய்வதில் சந்தோஷமே அதனால் கவலைப்படுவதை நிறுத்தி கொள். நீ கவலைப்படுவதை பார்க்கும் போது எனக்கு மிக கஷ்டமாக இருக்கிறது என்று சொன்னது.

Sunday, January 29, 2012

புதியதாக இலவச ஆன்டிவைரஸ் புரோகிராம் (Codename Morro) (Formal name Microsoft Security Essentials) வெளியிடப் போவதாக மைக்ரோசாஃப்ட் சொல்லியிருப்பது, காசுக்கு ஆன்டிவைரஸ் புரோகிராம் விற்று பிழைக்கும் சைமாண்டெக்(Norton) போன்ற கம்பெனிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

இலவச ஆன்டிவைரஸ் மட்டும் கொடுத்தா போதுமா?

Anti-Spyware,

Anti-Malware,

Anti-Rootkit,

Anti-Trojan,

Anti-Dialer,

Anti-Worm,

Anti-Adware,

Anti-Bot,

Anti-Keylogger,

Anti-Phishing இதுக்கெல்லாம் நாம எங்கே போவது?

மைக்ரோசாஃப்ட் விண்டோஸையே இலவசமா கொடுக்கிறதா பேச்சுக்கு வைச்சிக்கிட்டாலும், இந்த மேற்குறிப்பிட்ட Anti*.* இல்லாம விண்டோசை ஒழுங்கா ஓட்ட முடியுமா?

இதுங்களை வாங்கறதுக்கும், வருஷாவருஷம் அப்டேட் செய்யறதுக்கும் நாமதானே காசை எண்ணி வைக்கனும்.

தெரியாமதான் கேட்கிறேன். Anti-Virus எழுதத் தெரிந்தவர்களுக்கு, வைரஸே வராதமாதிரி Operating System கோட் செய்யத் தெரியாதா? அல்லது முடியாதா? அல்லது இஷ்டமில்லையா?

லினக்ஸ் வைரஸ் பாதிப்பு இல்லாமல் ஓடுதே. அது எப்படி?

விண்டோஸை இலவசமாக கொடுத்தாலும், personal and home use-க்குதான் தர வாய்ப்பு இருக்கிறது. Commercial use-க்கு காசு கொடுக்கனும்.

லினக்ஸ் personal and home use, commercial use-க்கு கூட இலவசம்தான். Linux Support contract தேவைப்பட்டா வாங்கிக் கொள்ளலாம்.

விண்டோஸ் இலவசமாக தந்தால்கூட எப்பவுமே அப்படி தருவார்கள் என்று அர்த்தம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் இனிமேல் காசுக்குத்தான் என்று சொல்லிவிடலாம்.

லினக்ஸ் அப்படி இல்லை. இன்றைக்கு இலவசமா கிடைப்பது என்றைக்குமே இலவசம்தான்.


இலவசமாக கிடைக்கக் கூடிய விண்டோஸை உங்களுக்கு தகுந்தமாதிரி மாற்றி பயன்படுத்த வேண்டும் என்றால் முடியாது. ஏனென்றால் அது proprietory and closed source program.

லினக்ஸ் அப்படி இல்லை. லினக்ஸ் source code டவுன்லோடு செய்து உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி மாற்ற நீங்கள் செய்த கோடிங்கை யாரிடமும் பகிர்ந்துகொள்ள தேவையில்லை. நீங்களே வைத்துக் கொள்ளலாம்.

அப்படி மாற்றப்பட்ட லினக்ஸை ஒரு distribution ஆக வெளியிடும்போது மட்டுமே அந்த மாற்றப்பட்ட கோடிங்கை கட்டாயமாக கொடுக்கவேண்டும்.

ஒரு operating system எப்படி இயங்குகிறது என்பதை விண்டோஸ் source code பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றால் முடியாது. Educational purpose என்று காரணம் சொன்னால்கூட பார்க்க கொடுக்கமாட்டார்கள்.

லினக்ஸ் source code-ஐ நீங்கள் educational purpose-க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏனென்றால் லினக்ஸ் ஒரு Free/Libre Open Source Software.

இதனால் கணினி பற்றிய ஆழ்ந்த அறிவு சமூகத்திற்கு கிடைக்கும். இது நல்ல விஷயம்தானே.

இந்த FOSS மென்பொருளை “கட்டற்ற மென்பொருள்” அல்லது ”திறப்பு மூல நிரலி” என்றெல்லாம் அழைத்து வந்தார்கள். இவ்வளவு சுதந்திரம் கொடுக்கும் மென்பொருளை “சுதந்திர மென்பொருள்” என்று ஏன் அழைக்கக்கூடாது?

நான் car-னு எதை சொல்றேன். Raincoat-னு எதை சொல்றேன் புரியுதா? லினக்ஸ் பயன்படுத்த Raincoat தேவையில்லை.

Online shops

 உலகளாவிய ரீதியில் online மூலமான வியாபாரங்கள் அதிகரித்து நேரடியான கடைகள் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்லும்.  இதனால் கடைகள் 24 மணித்தியாலமும...