Friday, February 3, 2012

தங்கம் உருவான கதை


















தங்கம் விண்ணிலிருந்து வந்தது

தங்கம் விண்ணிலிருந்து வந்தது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

தங்கம் மற்றும் பெருமதிப்பு வாய்ந்த தனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வந்தன என்பதுதான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி.

இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். கீரீன்லாண்டில் நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் படிமங்களில் இருந்த ஐசோடோப்புகள், பூமியிலிருந்து உருவான ஐசோடோப்புகளிலிருந்து தெளிவாக மாறுபட்டிருந்ததை பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே தங்களது இந்தக் கண்டுபிடிப்பானது, நாம் வாழும் பூமி சுமார் இருநூறு மில்லியன் வருடங்கள் பழமையானதாக இருக்கும் போது, அண்ட வெளியிலிருந்து வந்த மிகப்பெரிய எரிகற்களின் மோதல் காரணமாக, இன்று நாம் பயன்படுத்தும் பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் பூமியை வந்தடைந்தன என்கிற கோட்பாட்டை உறுதிபடுத்துகின்றது என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கத் துகள்கள்

மண்ணுடன் கலந்துள்ள தங்கத் துகள்கள்

பூமியின் ஆரம்பகாலங்களில் இந்த மோதல்கள் காரணமாக கொதித்து உருகிய நிலையில் இருந்த புவியின் மையப் பகுதிக்குள் தங்கம் மற்றும் இதர பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் மூழ்கின என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன.



ஆனால் நாம் நமது திருமண மோதிரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் தங்கமானது எப்படி உருவானது என்கிற கதை இன்னமும் ஆச்சரியாமாக உள்ளது.

இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை பார்த்திராத வகையில், அனுவின் ஒரு உட்கருவான நியூட்ரான்களின் மிகச் சக்தி வாய்ந்த மோதல்களிலேயே நாம் இன்று பயன்படுத்தும் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
முக்கியச் செய்திகள்
அணுவிலும் சிறிய துகள்கள் சில ஒளியை விட அதிகமான வேகத்தில் பயணிக்கின்றன என்று அண்மையில் காட்டிய பரிசோதனையை வேறு ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் செய்து பார்த்தபோது ஆம் துகள்கள் ஒளியை விட வேகமாகப் பயணிக்கின்றன என்ற முடிவேதான் இம்முறையும் வந்துள்ளன.

ஒளியின் வேகம்தான் இந்தப் பிரபஞ்சத்தின் அதிகபட்ச வேகம் அதைவிட வேகமாக எதுவாலும் பயணிக்க முடியாது என்பது பல காலமாக அறிவியல் சமூகம் நம்பிவரும் விடயம்.

அப்படியிருக்க கடந்த செப்டம்பரில் முதல் தடவையாக இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியானபோது அதனைப் பலரும் சந்தேகித்தனர்.

அணுவாராய்ச்சிக்கான ஐரோப்பிய மையத்தின் நிபுணர்கள் மாற்றியமைக்கப்பட்ட வகையில் இந்த பரிசோதனையை செய்து பார்த்தனர்.

நியூட்ரினோஸ் என்று சொல்லப்படுகிற அணுவிலும் சிறிய துகள்கள் ஒளியை விட சற்று அதிமான வேகத்தில் செல்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்கொண்டு பரிசோதனைகள் தொடரவுள்ளன.
அறிவியல்: இருண்ட பொருள் வரைபடம் தயார்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 ஜனவரி, 2012 - 17:48 ஜிஎம்டி



பேரண்டத்தின் கண்ணுக்கு தெரியாத இருண்ட பொருள்

பேரண்டத்தின் கண்ணுக்குத் தெரியாத இருண்ட பொருள்

யுனிவர்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பிரபஞ்சம் அல்லது பேரண்டத்தில் பெரும்பகுதியாக இருப்பது டார்க் மேட்டர் என்கிற விவரிக்கமுடியாத இருண்ட பொருள். நம் கண்களால் சாதாரணமாக பார்க்கமுடியாத இந்த இருண்டபொருள் குறித்து அறிவியல் உலகில் நீண்டநாட்களாகவே அறியப்பட்டிருந்தாலும், பேரண்டத்தில் இந்த விவரிக்க முடியாத இருண்ட பொருள் எவ்வளவு தூரம் பரவியிருக்கிறது, பேரண்டத்தின் எந்தெந்த பகுதிகளில் இந்த இருண்டபொருள் காணப்படுகிறது என்பது குறித்த வரைபடம் எதுவும் இதுவரை தயாரிக்கப்படவில்லை.

அப்படியானதொரு வரைபடம் தயாரிப்பதில் வானியல் விஞ்ஞானிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருப்பதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறார்கள்.

அமெரிக்க வானியல் ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் இத்தகைய வரைபடம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். இது விவரிக்கமுடியாத இருண்ட பொருள் குறித்த முழுமையான வரைபடம் இல்லை என்றாலும், விவரிக்க முடியாத இருண்ட பொருள் குறித்து இதுவரை தொகுக்கப்பட்ட வரைபடங்களிலேயே இது தான் பெரிய வரைபடமாக பார்க்கப்படுகிறது.

ஹவாயில் இருக்கும் பிரத்தியேக வான் தொலை நோக்கியை பயன்படுத்தி இந்த வரைபடத்தை இவர்கள் தயாரித்திருக்கிறார்கள். இதன்மூலம் நட்சத்திரங்கள் மற்றும் விண்வெளியில் இந்த இருண்ட பொருள் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை சாதாரண மனிதர்களும் பார்க்க படிக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த இருண்டபொருள் கண்ணுக்கு தெரியாது என்பதால், இதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு புகைப்பட லென்சை பயன்படுத்தி இந்த வரைபடத்திற்கு தேவையான புகைப்படங்களை இவர்கள் எடுத்தார்கள்.
பேரண்டத்தின் இருண்ட பொருள்

பேரண்டத்தின் இருண்ட பொருள்

பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருளும், தனது எடைக்கு ஏற்ப, தன்னைச்சுற்றியுள்ள இடத்தையும் நேரத்தையும் வளையச்செய்யும் அல்லது மாற்றியமைக்கும் என்பது அடிப்படை விதி. இந்த விதியின் அடிப்படையில் பார்த்தால், விவரிக்க முடியாத இருண்டபொருளானது, தன்னைக்கடந்து செல்லும் ஒளிக்கீற்றுக்களை வளைந்து செல்லும்படி செய்கிறது. பூமிக்கு வந்து சேரும் ஒளிக்கீற்றுக்களின் பாதையை வைத்துப்பார்க்கும் போது பிரபஞ்சத்தின் எந்த பகுதியில் இந்த இருண்ட பொருள் இருக்கிறது என்பதை அடையாளம் காண முடியும். அப்படித்தான் இந்த விஞ்ஞானிகள் பேரண்டத்தின் எந்தெந்த பகுதிகளில் இந்த விவரிக்கமுடியாத இருண்ட பொருள் இருக்கிறது என்பதை அடையாளம் கண்டு வரைபடம் தயாரித்திருக்கிறார்கள்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பிரபஞ்சத்தின் மிகச்சிறியதொரு பகுதியைத்தான் இவர்கள் அடையாளம் கண்டிருக்கிறார்கள். அதாவது நூறுகோடி ஆண்டுகள் ஒளி பயணிக்கக்கூடிய தூரத்தில் இருக்கும் வானத்தில் இருக்கும் இருண்டபொருளைத்தான் இவர்கள் தற்போது அடையாளம் கண்டிருக்கிறார்கள். அறுநூறு கோடி ஆண்டுகள் ஒளி பயணிக்கக்கூடிய தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் வெளிப்படுத்திய ஒளியைத்தான் இந்த ஆய்வாளர்கள் தற்போது ஆய்வு செய்தார்கள்.

இவர்கள் பார்த்த இந்த குறிப்பிட்ட பேரண்டத்தின் ஒரு பகுதியில், கேலக்ஸிஸ் எனப்படும் அண்டங்களை சுற்றி இந்த விவரிக்கமுடியாத இருண்ட பொருளானது சங்கிலித்தொடராக காணப்படுவதாகவும், பிறகு திடீரென ஒன்றுமே இல்லாத சூனியப்பிரதேசத்தில் இது செ
முடிவதாகவும்இவர்கள்தெரிவித்திருக்கிறார்கள்
மனித ரோமத்தை விட பத்தாயிரம் மடங்கு மெலிதான மின் கம்பிகளை உருவாக்குவதில் ஆஸ்திரேலியாவின் கணினி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.

கணினிகள் நாளுக்கு நாள் சிறிதாகிவருகிறன என்றாலும் அவற்றின் சக்தி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

கணினியில் பயன்படுத்தப்படும் உட்கூறுகளும் சின்னதாகிக்கொண்டே வருகின்றன.

அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தாத, அதிக வெப்பத்தை வெளியிடாத, அதிகம் மின் விரயம் செய்யாத கணினி உட்பொருட்களை உருவாக்குவதென்பது ஆராசய்ச்சியாளர்களுக்கு சிக்கல் நிறைந்த விஷயமாகவே இருந்து வந்துள்ளது.

அந்த சிக்கலைத் தீர்ப்பதில் பெரியதொரு முன்னேற்றம் கண்டிருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

நான்கு அணுக்கள் மட்டுமே அகலமும் ஒரு அணு மட்டுமே உயரமும் கொண்ட நுண்ணிய மின் கம்பிகளை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இவை உலோகக் கம்பிகள் அல்ல, சிலிகானால் ஆனவை.

சிலிகான் அணுக்களுடன் பாஸ்பரஸ் அணுக்களை கலந்து இந்த நுண்கம்பி உருவாக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யும்போது, கம்பியின் மின் கடத்தும் மையப்பகுதி பாதுகாக்கப்படும் அதே நேரம் கடத்தப்படும் மின்சாரம் அதிகம் விரயமும் ஆவதில்லை.

குவாண்டம் கணினிகள் என்று சொல்லப்படுகின்ற அதிவேகத் திறன் கொண்ட அடுத்த தலைமுறைகளைக் கணினிகளை உருவாக்குவதற்கு இந்த நுண்கம்பிகள் மிக அவசியமாகத் தேவைப்படும்.

Thursday, February 2, 2012

அணுகுண்டு கண்டுபிடிப்பு

முதன்முறையாக அணுஆயுதம் அமெரிக்காவில், பல்வேறு ஐரோப்பிய நாடுகளை சார்ந்த புலம் பெயர்ந்த அறிவியலாளர்களாலும், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளின் கூட்டுமுயற்சியாலும், இரண்டாம் உலகப்போரின்போது Manhattan Project என்ற பெயரில் நடந்த இரகசிய ஆராய்ச்சிகளின் விளைவாக உருவாக்கபட்டது. முதல் அணுஆயுதம் ஜெர்மானிய நாசிகளுடன் ஏற்பட்ட ஆயுதப்போட்டியின் விளைவாக உருவாக்கப்பட்டாலும், ஜப்பானியர்களுக்கு எதிராக ஜப்பானிய நகரங்களான இரோசிமா, நாகசாகி மீது பிரயோகிக்கப் பட்டது.

Wednesday, February 1, 2012

ஒருவன்: நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா...
மற்றவன்: பெண் அவ்வளவு அழகா?
ஒருவன்: இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா...

JJJJJ

தரகர்: பொண்ணு சிரிச்சா கன்னத்துல குழி விழும்...
பையனின் தந்தை: பொண்ணுக்கு பல் இல்லைங்கிறதை நாசூக்கா சொல்றீங்களா...?

JJJJJ

ஒருத்தி: இலவசம் என்றால் என் கணவர் எதையும் விட மாட்டார்...
மற்றொருத்தி: அப்படியா?
ஒருத்தி: ஆமாம்! இப்பப் பாரேன்... இலவச திருமணம் செய்துக்கிட்டு வந்திருக்கிறார்...

JJJJJ

ஒருவர்: கலப்புத் திருமணம் செய்தால் அரசாங்க உதவிகள் கிடைக்குமின்னு சொன்னாங்க... ஆனால் நீங்க அரெஸ்ட் செய்ய வர்றீங்களே...
போலீஸ்: அதுக்காக ஒவ்வொரு ஜாதியிலேயும் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துக்கச் சொல்லியிருக்கா...

JJJJJ

ஒருவர்: கல்யாணப் பத்திரிகையிலே பொண்ணோட தங்கை பெயர்களைப் போட்டு வயசையும் போட்டிருக்கிறீர்களே...?
மற்றவர்: ஆமாங்க... அடுத்து கல்யாணத்துக்கு பொண்ணுங்க இருக்கிறாங்கங்கிறத தெரிவிக்கத்தான்...

Online shops

 உலகளாவிய ரீதியில் online மூலமான வியாபாரங்கள் அதிகரித்து நேரடியான கடைகள் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்லும்.  இதனால் கடைகள் 24 மணித்தியாலமும...